தி லயன் கிங் (The Lion King)


1994-ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி வெளியிட்ட அனிமேஷன் படம் ’தி லயன் கிங்’ . காட்டின் ராஜாவான முஃபாஸா என்கிற சிங்கம் தனக்கு அடுத்தபடியாக தனது மகன் சிம்பா காட்டை ஆளும் பொறுப்பை ஒப்படைக்க இருக்கிறார். ஆனால் முஃபாஸாவின் சகோதரனான ஸ்கார் சூழ்ச்சி செய்து முஃபாஸாவை கொலை செய்து சிம்பாவை காட்டை விட்டு விரட்டியடிக்கிறார்.


காட்டிற்கு செல்லும் சிம்பா டிமோன் மற்றும் பும்பா ஆகிய இரு நண்பர்களை கண்டறிகிறான் . தனது நண்பர்களின் உதவியோடு தனது தந்தையை கொலை செய்த தனது சித்தப்பாவை வீழ்த்திவிட்டு மீண்டும் காட்டிற்கு ராஜாவாவதே தி லயன் கிங் படத்தின் கதை.


உலகம் முழுவதும் பிரபலமாகி கவனமீர்த்த இந்தப் படத்தை 2019-ஆம் ஆண்டு மீண்டும் ஒரு முறை நவீன் தொழில்நுட்பங்களை பயனோடு வெளியிட்டது வால்ட் டிஸ்னி. தி ஜங்கிள் புக் படத்தில் பயன்படுத்தப் பட்டதைப்போல் வர்ச்சுவல் ரியாலிட்டி தொழில் நுட்பங்களின் பயன்பாட்டோடு சிறப்பான கிராஃபிக்ஸ் காட்சிகளோடு உருவானது இந்த படம்.


மேலும் இப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு பிரபல ஹாலிவுட் நடிகர்கள் பின்னணி குரல் கொடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.  முதல் படத்திற்கு கிடைத்ததைக் காட்டிலும் பிரம்மாண்டமான வரவேற்பு இப்படத்திற்கு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக தி லயன் கிங் படத்தின் டிரைலரை வெளியிட்டு இருக்கிறது வால்ட் டிஸ்னி நிறுவனம் .


மறுபடியும் ஒரே கதையா என்று சலிப்படைய வேண்டாம் இந்த முறை வேறு ஒரு கதையுடன் வந்திருக்கிறார்கள் படக்குழுவினர்.


முஃபாஸா : தி லயன் கிங் (Mufasa : The Lion King)



முந்தைய இரண்டு படங்களில் நாம் பார்த்தது குழந்தையாக விரட்டியடிக்கப்பட்ட சிம்பா மீண்டும் காட்டிற்கு அரசன் ஆன கதையைத்தான். இந்த படத்தில் நாம் பார்க்க இருப்பது சிம்பாவின் தந்தையான முஃபாஸா காட்டிற்கு ராஜாவான கதை. முந்தைய இரண்டு படங்களில் முதல் இரண்டு காடிகளில் முஃபாஸா இறந்துவிடுவார். முஃபாஸா இளமையில் எப்படி இருந்தார் என்பதை காட்டும் படமாக முஃபாஸா : தி லயன் கிங்க் படம் இருக்கும்


மேலும் மிகக் கொடூரமான பரம்பரையில் இருந்து வந்த முஃபாஸா எப்படி காட்டில் மற்ற உயிரினங்கள் மதிக்கும் நாயகனாக மாறிய பயணத்தை இந்தப் படத்தில் நாம் பார்க்கலாம். ஹாலிவுட்டில் மூன் லைட் , இஃப் பீயல் ஸ்ட்ரீட் குட் டாக் உள்ளிட்ட படங்களை இயக்கிய பாரி ஜென்கின்ஸ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார் . மற்ற படங்களுக்கும் இந்தப் படத்திற்கு இருக்கும் தொழில்நுட்ப ரீதியான மற்றொரு வேறுபாடு இப்படத்தில் லைவ் ஆக்‌ஷன் அதாவது நிஜக் காட்சிகள் மற்றும் ஃபோட்டோ ரியல் செயற்கை நுண்ணறிவு ரீதியில் உருவாக்கப்பட்ட காட்சிகள் என இரண்டு தொழில்நுட்பங்களும் பயன்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது.


வரும் டிசம்பர் மாதம் இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது