FIDE உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் சீனாவின் டிங் லிரன், இந்தியாவின் டி குகேஷிடம் 'வேண்டுமென்றே' போட்டியில் தோல்வியடைந்ததாக ரஷ்ய செஸ் கூட்டமைப்பின் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

உலக செஸ் சாம்பியன்ஷிப்: 

உலக செஸ் சாம்பியஷிப்பின் இறுதிப்போட்டியில் சீன வீரர டிங் லிரேனை இந்திய வீரர குகேஷ் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினர். 12 ஆம் தேதி மாலை சிங்கப்பூரில் நடந்த இந்த போட்டியின் 14வது மற்றும் இறுதிச்சுற்று போட்டி விறுவிறுப்பாக நடந்தது. இந்த போட்டியை எப்பாடியாவது டிரா செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் நடப்பு சாம்பியனான டி லிரேன் போராடினார். 

இதையும் படிங்க: Paddy Upton : யாரு சாமி நீங்க! கிரிக்கெட் முதல் செஸ் வரை.. இந்தியாவை தலை நிமிர் செய்த தென்னாப்பிரிக்கர்.. யார் இந்த பேடி அப்டன்?

குகேஷ் சாம்பியன்:

இருப்பினும் 14வது சுற்றின் 53வது நகர்த்தலில் லிரேன் ஒரு மிகப்பெரிய தவறை செய்தார், அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு குகேஷ் போட்டியில் வெற்றிப்பெற்றார். இதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்கிற சாதனையை குகேஷ் படைத்தார். மேலும் 11 ஆண்டுகளுக்கு பிறகு உலக செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற இந்தியர் ஆனார் குகேஷ்.

சர்ச்சையை கிளப்பும் ரஷ்யா:

இந்த நிலையில் செஸ் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் டி லிரேன்  வேண்டுமென்றே விட்டுக்கொடுத்ததாக ரஷ்ய செஸ் கூட்டமைப்பின் தலைவர் ஆண்ட்ரே ஃபிலடோவ் குற்றம் சாட்டியுள்ளார். சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) இப்போட்டி குறித்து ஒரு விசாரணையை தொடங்கி நடத்த வேண்டும்  கேட்டுக் கொண்டார்.

"கடைசி ஆட்டத்தின் முடிவு தொழில் வல்லுநர்கள் மற்றும் செஸ் ரசிகர்களிடையே திகைப்பை ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. போட்டியின் முக்கியமான தருணத்தில் சீன செஸ் வீரரின் நடவடிக்கைகள் மிகவும் சந்தேகத்திற்குரியது மற்றும் FIDE இன் தனி விசாரணை தேவைப்படுகிறது," என்று அவர் கூறினார்.

"டிங் லிரன் இருந்த நிலையை இழப்பது முதல்தர வீரருக்குக் கூட கடினமானது. இன்றைய ஆட்டத்தில் சீன சதுரங்க வீரரின் தோல்வி பல கேள்விகளை எழுப்புகிறது மற்றும் அவர் வேண்டுமென்றே தோற்றது போல் உள்ளதாக ரஷ்ய செஸ் கூட்டமைப்பின் தலைவர் ஆண்ட்ரே ஃபிலடோவ் குற்றம் சாட்டியுள்ளார்.