Vaadivasal: 200 கோடி பட்ஜெட்... சூர்யா - வெற்றிமாறனின் புதிய கூட்டணி...விரைவில் ஷூட்டிங் ஆரம்பம் 


நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. அவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த "வாடிவாசல்" திரைப்படம் பற்றின லேட்டஸ்ட் அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.



கலைப்புலி.எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் சூர்யா நடிக்கும் இப்படத்தை இயக்க உள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். வெற்றிமாறன் - சூர்யா கூட்டணியில் உருவாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. வாடிவாசல் திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளார் ஜிவி பிரகாஷ். இப்படத்தின் டெஸ்ட் வீடியோ ஷூட்டிங் காட்சிகளில் இருந்து ஒரு சீன் மட்டும் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து "வாடிவாசல்" படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்க வாய்ப்புள்ளதாக நெருங்கிய திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு பல காரணங்களால் நீண்ட நாட்களாக துவங்காமல் தள்ளி போய்க்கொண்டே இருந்தது. 


 






 


விரைவில் வாடிவாசலுக்கு தயாராகிறார் சூர்யா:


தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகிவரும் "வணங்கான்" படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. மேலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் "சூர்யா 42 " என்ற படத்தின் ஷெட்யூலை முடித்த பிறகு "வாடிவாசல்" திரைப்படத்தில் பிஸியாகி விடுவார் சூர்யா என கூறப்படுகிறது. இதுவரையில் சூர்யா நடித்த படங்களிலேயே அதிகமான சுமார் 200 கோடி ரூபாய் என அதிக  பொருட்செலவில் தயாராக இருக்கும் திரைப்படம் "வாடிவாசல்". 


 






 


அடுத்தடுத்த ப்ராஜெக்ட் குறித்த விவரம்:


மறுபுறம் இயக்குனர் வெற்றிமாறன் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகிவரும் "விடுதலை" படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் மிகவும் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். மேலும் சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்க உள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் "அசுரன்" திரைப்படமும் 'வெக்கை' எனும் ஒரு நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.  நடிகர் சூர்யா 'சூரரைப் போற்று' இயக்குனர் சுதா கொங்கரா, 'ஜெய் பீம்' இயக்குனர் டி.ஜே.ஞானவேல் மற்றும் இயக்குனர் ரவிக்குமார் ஆகியோருடன் இணைந்து பணிபுரிய உள்ளார் நடிகர் சூர்யா.