நடிக ர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் The Greatest of All Time படம் பற்றிய தகவல்களை இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
பிகில் படத்துக்குப் பின் விஜய்யை வைத்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் The Greatest of All Time படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி ஹீரோயினாக நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் மைக் மோகன், லைலா, சினேகா, பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைந்துள்ளது.
The Greatest of All Time படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஜூன் மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது. இப்படியான நிலையில் பட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த இயக்குநர் வெங்கட் பிரபு The Greatest of All Time படம் பற்றி பல தகவல்களை தெரிவித்திருக்கிறார்.
அதாவது, “ The Greatest of All Time படம் ரீமேக் எல்லாம் கிடையாது. படம் பார்த்து நீங்கள் எப்படி இருக்கிறது என சொல்லுங்கள். கோட் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய் 24 மணி நேரமும் எங்களுடன் தான் இருக்கிறேன். இந்த மாசத்துடன் படத்தின் கிளைமேக்ஸ் முடிந்து விடும். அதன்பிறகு ஒரு சில காட்சிகள் படமாக்க வேண்டி இருப்பதால் அடுத்த மாதம் மொத்த ஷூட்டிங்கும் முடிந்து விடும். எல்லா அப்டேட்டையும் இப்பவே சொல்ல முடியாது.
நான் அஜித், விஜய் இருவரை வைத்து படம் எடுத்து விட்டேன். இருவரும் கேரக்டர் ஆர்டிஸ்ட் என சொல்லக்கூடியவர்கள். விஜய், அஜித் இருவருடன் படம் பண்ணும்போது ரொம்ப கூலாக இருந்தது. அவர்கள் அனைவரையும் படப்பிடிப்பில் ஜாலியாக வைத்து விடுவார்கள்.விரைவில் கோட் படத்தின் அப்டேட் வெளியாகும். அஜித்திடம் பிரியாணி ஸ்பெஷல் என்றால் விஜய்யிடன் டான்ஸ் ஸ்பெஷலாக இருக்கும். மேலும் விஜய் சினிமாவில் நடிக்க மாட்டார் என சொன்னது ஒரு ரசிகனாக கஷ்டமாகத்தான் இருந்தது என வெங்கட்பிரபு கூறினார்.
அப்போது அவரிடம், “The Greatest of All Time படப்பிடிப்பில் முழு மூச்சாக நடித்து கொண்டிருப்பதால் அம்பானி வீட்டு நிகழ்ச்சிக்கு விஜய் போகவில்லை என மீம்ஸ்கள் வந்த வண்ணம் உள்ளதே..அது பற்றி உங்கள் கருத்து என்ன?” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வெங்கட்பிரபு, ‘ எனக்கு தெரியவில்லை. அது விஜய்யின் பெர்சனல் விஷயம்’ என பதிலளித்தார்.