“சென்னை 600028” படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கிய சரோஜா, கோவா, மங்காத்தா உள்ளிட்ட படங்கள் பெரும் ஹிட் ஆனவை. குறிப்பாக வெங்கட் பிரபு படங்கள் என்றாலே ஒரு ஜாலி மூட் இருக்கும் என்ற இமேஜும் கோலிவுட்டில் உண்டு.
இவர் சமீபத்தில் சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கினார். பல தடைகளை தாண்டி வெளியான இப்படம் சென்சேஷ்னல் ஹிட் ஆனது. டைம் லூப் கான்செப்ட்டை தமிழுக்கு முதலில் அறிமுகப்படுத்தியதோடு மட்டுமில்லாமல் சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்ததற்கு வெங்கட் பிரபுவுக்கும் அவரது குழுவுக்கும் பலர் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அஜித்துக்கும், வெங்கட் பிரபுவுக்குமே மாஸ் ஹிட்டான மங்காத்தாவை போல இன்னொரு படத்தை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். மீண்டும் அஜித்துடன் வெங்கட் பிரபு கைகோக்க வேண்டுமென்றும் சோஷியல் மீடியாவில் அவ்வப்போது கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து வாய்திறந்துள்ளார் வெங்கட் பிரபு.
நேர்காணல் ஒன்றில் பேசிய வெங்கட்பிரபு, ”மாநாடு படத்தின் ஹிந்தி ரீமேக் இந்த ஆண்டு கடைசியில் நடக்குமென நினைக்கிறேன். அந்த வாய்ப்பை மிஸ் செய்ய நினைக்கவில்லை. பல்வேறு மொழிகளில் பல்வேறு நடிகர்களுடன் பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன். மங்காத்தா முடிந்த உடனேயே அடுத்த பாகத்தையும் நான் இயக்கி இருக்க வேண்டும். அதற்கு முன்பே கையெழுத்திட்ட வேலைகள் பாக்கி இருந்ததால் அதனை என்னால் தொடர முடியவில்லை. அது என்னுடைய துரதிர்ஷ்டம். நான் இன்றும் அஜித்துடன் தொடர்பில் இருக்கிறேன். உங்களைப் போல நானும் ஆர்வமாகவே இருக்கிறேன். அதுபோல விஜயை இயக்க வேண்டுமென்பதும் நீண்ட கால ஆசையாக உள்ளது. அதற்காக ரொம்ப நாளாக பேச்சுவார்த்தையிலும் இருக்கிறோம். ஆனால் நேரம் இதுவரை செட் ஆகவில்லை” என்றார்.
இதற்கிடையே வெங்கட் பிரபு அடுத்ததாக என்ன படம் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்தது. அவர் அடுத்ததாக தன்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவரின் கதையை இயக்க இருக்கிறார். படத்துக்கு மன்மத லீலை என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்