“ஒரு காதல் என்ன செய்யும்” என்ற ட்ரெண்டிங்தான் கடந்த சில நாட்களாக சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி பேசு பொருளாக மாறியிருக்கிறது. ட்ரெண்ட் செய்வது என்பது நம் ஊர்காரர்களுக்கு புதிதா என்ன? சாதித்தால் ட்ரெண்டிங், செத்தால் ட்ரெண்டிங், ட்ரோல் ஆனால் ட்ரெண்டிங், அடித்துக்கொண்டால் ட்ரெண்டிங் என சகட்டுமேனிக்கு ட்ரெண்ட் செய்வதில் நம்மூர் மக்களுக்கு நிகர் நம்மூர் மக்கள்தான். 


அன்றாட நிகழ்வுகளுக்குகேற்பவும், தனிநபர் ரசனைக்கேற்பவும் ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆவது வழக்கம். அதற்கு சான்றுகளாக பிக்பாஸ் தொடர்பான ஹேஷ்டேக்குகளையும், பாடி ஷேமிங்கிற்கு உள்ளான சாய் பல்லவி தொடர்பான ஹேஷ்டேக்கையும் சொல்லலாம். 


இது ஒரு ரகம் என்றால் இன்னொரு ரகம் இருக்கிறது. இந்த ரகத்தில் அந்த ஹேஷ்டேக் எதற்கு ட்ரெண்ட் ஆகிறது என்பது யாருக்கும் தெரியாது.. அதற்கு சான்றுதான் கடந்த காலத்தில் ட்ரெண்ட் ஆன வடிவேலுவின் நேசமணி கதாபாத்திரம் தொடர்பான ஹேஷ்டேக். எதற்கு ட்ரெண்ட் ஆகிறது என்று தெரியாமல்.. உலகம் முழுக்க நேசமணி கதாபாத்திரம் தொடர்பான #Praying for Nesamani என்ற ஹேஷ்டேக் நாடு முழுவதும் ட்ரெண்ட் ஆனது. 


அந்த வரிசையில் தற்போது   “ ஒரு காதல் என்ன செய்யும்” என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இது எங்கே இருந்து ஆரம்பித்தது, யார் ஆரம்பித்தது, எதற்காக ட்ரெண்டாகிறது என்ற எந்த தகவலும் கிடையாது.


காதலர் தினம் வரும் 14 ஆம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அன்றைய தினத்தில் காதலர்கள் சந்தித்து பார்த்து அன்பை பரிமாறிகொள்வது வழக்கமான நடைமுறையாக இருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக இப்படி ஒரு ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகியிருப்பது.. அப்பரசென்டிகளா . சொல்லிட்டு ட்ரெண்ட் பண்ணுங்கடா என்று நெட்டிசன்களை கடுப்பேற்றி வருகிறது.