சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயனின் எந்த பட அப்டேட் என்றாலும் ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும். அனைத்து வயதினரையும் தனது ரசிகராய் கட்டிப்போட்டிருக்கும் சிவகார்த்திகேயனின் சமீபத்திய ஹிட் டாக்டர்.  இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். லைகாவுடன் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில், டாக்டரில் சிவாவுடன் ஜோடி சேர்ந்த பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ‘குக் வித் கோமாளி’சிவாங்கி, இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 


இந்த படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன், அயலான், சிங்கபாதை, நடிகர் கமல் தயாரிக்கும் புதிய படம் மற்றும் தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் பைலிங்குவல் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இப்படி தொடர்ச்சியாக நான்கு படங்களுக்கு மேல் கைகளில் வைத்து இந்தாண்டு தமிழ் சினிமாவை கலக்க இருக்கிறார். 


இந்தநிலையில், நீண்ட நாட்களுக்கு முன்பு இயக்குநர் வெங்கட் பிரவு இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியது. அதனை தற்போது உறுதி செய்யும் வகையில் இந்த கூட்டணி குறித்து புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. 


அதன்படி, சிவகார்த்திகேயனை வைத்து தமிழில் அடுத்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் நாக சைதன்யா படம் முடிந்ததும் சிவகார்த்திகேயன் பட வேலைகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


ஏற்கனவே, வெங்கட் பிரபு இயக்கி வந்த "பார்ட்டி" திரைப்படம் நீண்ட நாட்கள் ஆகியும் எப்பொழுதும் ரீலிஸ் செய்யப்படும் என்ற அப்டேட் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. இந்தநிலையில், அடுத்த படத்தை தொடங்க இருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. முன்னதாக, இயக்குநர் வெங்கட் பிரவு நடிகர் அஜித் மற்றும் நடிகர் விஜயை வைத்து மங்காத்தா பார்ட் 2 திரைப்படத்தை இயக்க போவதாக செய்திகள் பரவி வந்தனர். தற்போது, நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்க போவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண