நடிகர் ஜெய் நடித்துள்ள எண்ணித்துணிக படத்தை பார்த்த இயக்குநர் வசந்த் புகழ்ந்து தள்ளியுள்ளார். 






இயக்குநர் வசந்திடம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக உதவி இயக்குநராக பணியாற்றி வந்த எஸ்.கே.வெற்றிச் செல்வன் என்பவர் எண்ணித்துணிக படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் ஜெய், அதுல்யா, வம்சி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ள நிலையில் சாபு ஜோசப் எடிட்டிங் செய்துள்ளார். இப்படம் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படம் பார்த்த பலரும் கதை உட்பட அனைத்தும் சூப்பராக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 






இதனிடையே படத்தைப் பார்த்த இயக்குநர் வசந்த் எண்ணித்துணிக படக்குழுவினரை பாராட்டி புகழ்ந்து தள்ளியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில்,எண்ணித்துணிக மிகப்பெரிய வெற்றி..எப்படி சொல்றது வெற்றியை அறிவிக்கிறதும், அறிவதும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். படம் பார்த்தேன். ரொம்ப ரொம்ப பிடிச்சிது. அதாவது படம் தொடங்கியதில் இருந்து கடைசி வரை நல்ல சுவாரஸ்யமாக இருக்கிறது. ஒரு 5, 6 பேரை எண்ணித்துணிக படத்திற்காக பாராட்ட வேண்டும் என நினைக்கிறேன். இயக்குநர் எஸ்.கே.வெற்றிச்செல்வன், என்கிட்ட உதவியாளரா இருந்தார். அவர் எடுத்த படம் நல்லா இருக்குன்னு சொல்றது எனக்கு பெருமையா இருக்குது. கதை, திரைக்கதை, வசனம், கதாபாத்திரங்கள் தேர்வு என அனைத்தையும் வெற்றி சிறப்பாக செய்துள்ளார். 


அடுத்ததாக ஜெய், படத்தில் எல்லாரும் கூப்பிடுவது போல நிஜமாகவே அவர் டார்லிங் தான். ஜெய்க்கு இது கம்பேக் கொடுத்துள்ளது. அடுத்ததாக கேமராமேன் தினேஷ், என்னுடைய சத்தம் போடாதே படத்தில் அறிமுகம் செய்யப்பட்டவர். அவர் மிகச்சிறப்பாக செய்துள்ளார். அடுத்து எடிட்டர் சாபு ஜோசப், இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இருவரும் தனது பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்துள்ளனர். படத்தில் ஒரு ஆபாசம்,வன்முறை காட்சிகள் என எதுவும் இல்லை. இப்படம் வெற்றிப்பெற்றுள்ள நிலையில் அனைவரும் தியேட்டருக்கு சென்று இப்படத்தை காண வேண்டும் என இயக்குநர் வசந்த் தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண