முதன்முதலில் வடிவேலுவுடன் நடிக்கவே கோவை சரளா மறுத்ததாக நேர்காணலில் இயக்குநர் வி.சேகர் தெரிவித்துள்ளார். 


1994-ஆம் ஆண்டு வி.சேகர் இயக்கத்தில் நாசர், ராதிகா, வடிவேலு, கவுண்டமணி, கோவை சரளா, செந்தில், ஜெய்சங்கர், வினுசக்கரவர்த்தி என பலர் நடிப்பில் வெளியான படம் “வரவு எட்டணா செலவு பத்தணா”. சந்திரபோஸ் இசையமைத்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற படமாகும். இந்த படத்தில் முதன்முதலில் வடிவேலு - கோவை சரளா ஜோடி ஒன்றாக நடித்தனர். 


ஆனால் அதற்கு பின்னால் மிகப்பெரிய சம்பவம் நடந்துள்ளது. ஒரு நேர்காணலில் பேசிய இயக்குநர் வி.சேகர், “எனக்கும் கவுண்டமணிக்கும் இடையே ஒரு இடைவெளி விழுந்தது. அது வந்திருக்கக்கூடாது. அதற்கு வடிவேலு தான் காரணம். வி.சேகர் படத்தில் கவுண்டமணி, செந்தில் காம்போ இருந்தால் படம் ஓடிவிடும் என விநியோகஸ்தர்கள் வாங்கி விடுவார்கள்.


சில பேர் டைட்டில் மட்டும் கேட்பார்கள். ஒருமுறை விநியோகஸ்தர்கள் வடிவேலுவை நடிக்க வைக்க சொல்லி கேட்கிறார்கள். 


வடிவேலுக்குள் இந்த சினிமா வெறி ராஜ்கிரனால் சினிமாவுக்கு அழைத்து வர வைத்தது. தேவர் மகன் படம் பார்த்தேன். வடிவேலு நன்றாக நடித்திருந்தார். ஏற்கனவே வரவு எட்டணா செலவு பத்தணா படத்தில் நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள். இதில் வடிவேலுவுக்கு எப்படி வாய்ப்பு தர என யோசித்தேன்.


அப்பதான் எனக்கு வடிவேலு ஜோடியாக யாரையாவது போட வேண்டும் என நினைத்தேன். கோவை சரளாவை கூப்பிட்டு விஷயத்தை சொன்னேன். 


அவரோ, நீங்க ஏன் மார்க்கெட்டை காலி பண்ணி விடுவீர்கள்போல என சொல்லி பயந்தார். அவர் இப்பதான் நடிக்கத்தானே வந்திருக்கிறார் என கோவை சரளா சொன்னார். நான் வடிவேலு நன்றாக நடிப்பான் என நம்பிக்கை கொடுத்தேன். நான் கமல்ஹாசன், பாக்யராஜ் ஆகியோரோடு நடிக்கிறேன். உங்கள் படத்தில் எனக்கு நல்ல கேரக்டர் கொடுப்பீர்கள். ஆனால் அதை நீங்களே முடிக்க பார்க்கிறீர்களே? என கோவை சரளா என்னிடம் கேட்டார். 


நான் பாராட்டும்படி செய்கிறேன் என உறுதியளித்தேன். இந்த விஷயம் எப்படியோ கவுண்டமணி, செந்தில் காதுக்கு சென்று விட்டது. கோவை சரளாவை வடிவேலுக்கு ஜோடியாக நடிப்பது பற்றி கேட்டு பயமுறுத்தியுள்ளார். நான் எதிர்காலத்தில் வடிவேலு நன்றாக வருவான். அதான் நீ நடி என சொல்லியதோடு கவுண்டமணி, செந்திலை அழைத்து பேசினேன். 


அதன்பின்னர் வடிவேலு என்னை தொட்டு நடிக்கவோ, கட்டிப்பிடிக்கவோ கூடாது என நிபந்தனை வைத்தார் கோவை சரளா. நான் அப்படி இப்படி என சமாளித்து 15 காட்சிகள் வைத்தேன். படம் வெளியாகி அவர்கள் காட்சி சூப்பர் ஹிட்டானது" என்றார்