இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா குறித்து நடிகர் அதர்வா, இயக்குநர் சுந்தர் சி கருத்து தெரிவித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
1997 ஆம் ஆண்டு சரத்குமார் நடித்த அரவிந்தன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தனது 16வது வயதில் அறிமுகமான யுவன் சங்கர் ராஜா இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். இடையில் இசைக்கு கொஞ்சம் இடைவெளி விட்டு தயாரிப்பாளராகவும் களமிறங்கிய யுவன் மீண்டும் இசையில் தனது கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளார்.
தொடர்ந்து அவர் இசையில் குருதியாட்டம், காபி வித் காதல் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதில் 2003 ஆம் ஆண்டு வெளியான வின்னர் படத்திற்குப் பிறகு 19 ஆண்டுகள் கழித்து இயக்குநர் சுந்தர் சி உடன் அவர் இணைந்துள்ளார். இதனிடையே பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள இயக்குநர் சுந்தர் சி, யுவன் இப்போதும் பார்ப்பதற்கு குட்டிப்பையனாகவே இருக்கிறார். நானும் அவரும் ஒன்றாக பணிபுரிந்து 19 வருடம் ஆகி விட்டது என நினைக்கிறேன். அவர் அப்போது எப்படி இருந்தாரோ அப்படியே தான் இப்பவும் இருக்கிறார். எது கேட்டாலும் சிரிப்பை மட்டுமே பதிலாகவே தருவார் என கூறியுள்ளார்.
இதேபோல நடிகர் அதர்வாவும் தனது முதல் படமான பாணா காத்தாடி படத்தின் போது பார்த்த யுவனும், தற்போது குருதி ஆட்டம் படத்திற்கு பார்க்க சென்ற போது இருந்த யுவனும் என்னால் நம்ப முடியவில்லை. அப்படியே இருக்கிறார் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்