தனக்கு சிறிய வயதில் இருந்தே மலையாள படங்களில் பார்க்க பிடிக்கும் என இயக்குநர் சுந்தர் சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவர் சுந்தர் சி. இவர் 2006 ஆம் ஆண்டு வெளியான தலைநகரம் படம் மூலம் ஹீரோவானார். அப்படம் சுந்தர் சி.,க்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தை சுந்தர் சி.யுடன் பல ஆண்டுகளாக பயணித்த சுராஜ் இயக்கினார். இந்த படத்தின் தொடர்ச்சி “நகரம் மறுபக்கம்”, “தலைநகரம் 2” என்ற இரு பெயரில் எடுக்கப்பட்டு தோல்வியடைந்தது.

இதனிடையே ஒரு நேர்காணலில் சுந்தர் சி.யிடம், ‘நீங்க நடிச்ச தலைநகரம், வீராப்பு, முத்தின கத்திரிக்கா போன்ற மலையாள படங்களின் ரீமேக்குகளில் நடித்திருக்கிறீர்கள். நீங்கள் பிரியதர்ஷனின் மின்னாரம் உள்ளிட்ட படங்களை ரீமேக் செய்திருக்கிறீர்கள். உங்களுக்கு மலையாள சினிமாவுக்குமான தொடர்பு என்ன?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது. 

Continues below advertisement

”நான் அடிப்படையில் கோயம்புத்தூர் காரன் என்பதால் அங்கு அதிகளவில் வெளியாகும் மலையாள படங்களையெல்லாம் பார்ப்பேன். பள்ளி படிக்கும்போது மோகன்லால் மற்றும் மம்மூட்டி பிஸியான நடிகர்களாக வலம் வந்த நேரம். படங்கள் எல்லாம் சூப்பர் சூப்பராக இருக்கும். இங்கு ரஜினி, கமல் ஆண்டு கொண்டிருந்தார்கள். அப்ப இருந்தே மலையாள படங்கள் ரொம்ப பிடிக்கும். 80 மற்றும் 90களில் வெளியான பிரியதர்ஷன், மோகன்லால், சீனிவாசன் படங்களின் தாக்கம் என்னுடைய படங்களில் இருக்கும். 

பிரியதர்ஷன் இயக்கிய மின்னாரம் படம் தான் கார்த்தி நடித்த அழகான நாட்களாக உருவானது. அப்படி பார்க்கும்போது தலைநகரம் படம் ரீமேக் என்பது பல ஆண்டுகளாக தெரியாது. அது இயக்குநர் சுராஜின் திறமை. எங்க அம்மாவுக்கு 92 வயதாகிறது. அவங்க கடந்தாண்டு என்னிடம் நீ ஒரு மோகன்லால் படம் நடிச்சியே அது போடுறாங்கன்னு பாரு என சொன்னார். நான் என்ன மோகன்லால் படம் நடிச்சேன்னு பார்த்தால் அது தலைநகரம் படம். நான் இத்தனை நாளா அது நேரடி தமிழ் படம் என்று தான் நினைத்தேன். ஆனால் தலைநகரம் படத்தின் தயாரிப்பாளர், நடிகர் நான். ஆனால் சுராஜ் எனக்கே கதையை வித்துட்டாருன்னு தெரிஞ்சது. எனக்கு கடந்த வருடம் தான் உண்மையே தெரிஞ்சுது. இதுதெரியாம படத்தோட டிஸ்கஷனில் எல்லாம் நான் இருந்தேன். இதில் என்ன காமெடி என்றால் தலைநகரம் படத்தை தெலுங்கில் ரைட்ஸ் வாங்கி ரீமேக் செய்தார்கள்” என வேடிக்கையாக தெரிவித்திருந்தார்.