Maruti Car Offers: மாருதி சுசுகி நிறுவனத்தின் 2023ம் ஆண்டு ஜிம்னி மாடலுக்கு அதிகபட்சமாக 1.5 லட்ச ரூபாய் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாருதி கார்களுக்கான சலுகை:
மாருதி சுசுகி நெக்ஸா டீலர்கள் தங்களிடம் உள்ள பெரும்பாலான மாடல்களுக்கு பணத் தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ்ச் போனஸ்கள் மற்றும் பிற நன்மைகளை வழங்குகின்றனர். Invicto MPV தவிர, அனைத்து Nexa கார்களுக்கும் இந்த மாதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி ஃப்ரான்க்ஸ்:
மாருதி சுசுகி Fronx இன் டர்போ-பெட்ரோல் எடிஷன்களுக்கு ரூ. 58,000 மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகிறது, இதில் ரூ. 15,000 ரொக்கத் தள்ளுபடி, ரூ. 30,000 மதிப்புள்ள ஒரு வெலாசிட்டி எடிஷன் ஆக்சஸரி கிட், ரூ. 10,000 மதிப்புள்ள எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ. 3,000 கார்ப்பரேட் நன்மைகள் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எடிஷன்கள் முறையே ரூ.23,000 மற்றும் ரூ.13,000 வரை பலன்களை பெறுகின்றன.
மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா:
கிராண்ட் விட்டாரா ஹைப்ரிட் மாடலை ரூ. 74,000 வரை பலன்களுடன் வாங்கலாம். இதில் ரூ. 20,000 ரொக்க தள்ளுபடி, 3 ஆண்டு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம், ரூ. 50,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ. 4,000 வரையிலான கார்ப்பரேட் சலுகைகள் ஆகியவை அடங்கும். டெல்டா பெட்ரோல் எடிஷன் ரூ.44,000 வரை தள்ளுபடியுடன் வழங்கப்படுகிறது. அதே சமயம் Zeta பெட்ரோல் மற்றும் ஆல்பா பெட்ரோல் எடிஷன்கள் தற்போது ரூ.59,000 மதிப்புள்ள நன்மைகளுடன் கிடைக்கின்றன. சிக்மா பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வகைகளில் ரூ. 4,000 மதிப்பிலான நன்மைகள் வழங்கப்படுகின்றன.
மாருதி சுசுகி ஜிம்னி:
முந்தைய மாதத்தைப் போலவே, எந்த நெக்ஸா கார்களையும் விட ஜிம்னி அதிக தள்ளுபடியுடன் தொடர்ந்து வழங்கப்படுகிறது. MY2023 எடிஷன் ரூ. 1.50 லட்சம் ரொக்க தள்ளுபடியுடன் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் புதிய MY2024 மாடல்களுக்கு ரூ. 50,000 ரொக்க தள்ளுபடி கிடைக்கும். ஜிம்னி 1.5-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் 105hp மற்றும் 134Nm ஆற்றலை வெளிப்படுத்தும். இது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது ஆப்ஷனல் 4-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோ டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி இக்னிஸ்:
இக்னிஸின் 5-ஸ்பீட் AMT எடிஷன்கள், ரூ. 53,100 வரை மதிப்புள்ள நன்மைகளுடன் வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில் 5-ஸ்பீட் மேனுவல் எடிஷன்கள் குறைந்த பணப் பலன் காரணமாக ரூ.48,100 வரை தள்ளுபடியைப் பெறுகின்றன. இக்னிஸ் 83 ஹெச்பி மற்றும் 113 என்எம் ஆற்றலை உருவாக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.
மாருதி சுசுகி பலேனோ:
பலேனோ பெட்ரோல்-ஆட்டோமேடிக் எடிஷன்களுக்கு இந்த மாதம் ரூ.50,000 வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் பெட்ரோல்-மேனுவல் எடிஷன்களுக்கு ரூ.45,000 வரை மதிப்புள்ள நன்மைகள் மட்டுமே கிடைக்கும்.
மாருதி சுசுகி சியாஸ்:
மாருதி சுசுகி சியாஸின் அனைத்து வகைகளும் ரூ.48,000 வரை தள்ளுபடியுடன் கிடைக்கின்றன. இதில் ரூ.20,000 ரொக்க தள்ளுபடி, ரூ.25,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.3,000 மதிப்புள்ள கார்ப்பரேட் நன்மைகள் உள்ளன. மாருதி சுசுகியின் நெக்ஸா வரிசையில் உள்ள ஒரே செடானாக சியாஸ் தொடர்கிறது. ஹூண்டாய் வெர்னா, ஸ்கோடா ஸ்லாவியா, ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் மற்றும் ஹோண்டா சிட்டி ஆகியவற்றுக்கு போட்டியாக உள்ளது.
மாருதி சுசுகி XL6:
XL6 பெட்ரோல் எடிஷன்களுக்கு ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் மட்டுமே வழங்கப்படுகிறது. MPV ஆனது 103hp, 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வழங்கப்படுகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. XL6 இன் CNG எடிஷன்களுக்கு இந்த மாதம் எந்த தள்ளுபடியும் அறிவிக்கப்படவில்லை.
Car loan Information:
Calculate Car Loan EMI