இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் முதல் திகில் படமாக வெளியான அரண்மனை படத்தின் முதல் பாகம் வெளியாகி இன்றோடு 9 ஆண்டுகள் நிறைவடைகிறது. 


ஜானரை மாற்றிய சுந்தர்.சி


தமிழ் சினிமாவில் காமெடி கலந்த கதைகளை எடுக்கும் கில்லாடி இயக்குநர்களில் ஒருவர் சுந்தர். சி. ரஜினி, கமல், அஜித், பிரசாந்த், அர்ஜூன் என முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கிய அவர் பெரும்பாலும் காமெடி கலந்த காதல் கதைகளை தான் தன் படங்களில் இடம் பெற செய்வார். இப்படியான சுந்தர்.சி முழுக்க முழுக்க தனது ஜானரை பேய் படமாக மாற்ற விரும்பினார். அதன்படி அரண்மனை படம் உருவானது. 


உண்மையில் சுந்தர்.சி., இப்படி ஒரு எண்ணம் ஏற்பட காரணம் அநேகமாக ராகவா லாரன்ஸ் ஆக தான் இருக்கும் என பலருக்கும் தோன்றியது. காரணம் முனி படம் மூலம் காமெடி கலந்த ஜானரை கையில் எடுத்த அவர் தொடந்து காஞ்சனா காஞ்சனா 2, காஞ்சனா 3 ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து தமிழில் ஏராளமான பேய் படங்கள் வெளியாக தொடங்கியது. அதில் சுந்தர்.சி.,யும் இணைந்தார். 


இப்படியான நிலையில், அரண்மனை படத்தில் வினய், ஆண்ட்ரியா, ஹன்சிகா, சந்தானம், நிதின் சத்யா, கோவை சரளா, மனோ பாலா, லட்சுமிராய் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்க சுந்தர்.சி சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். பரத்வாஜ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்திற்கு கார்த்திக் ராஜா ன்னணி இசையை அமைத்துள்ளார்.


படத்தின் கதை 


ஜமீன்தார் குடும்ப வாரிசுகளான சித்ரா லட்சுமணன், வினய், கோவை சரளா ஆகியோர் தங்கள் பாரம்பரிய அரண்மனையை விற்க முயற்சி செய்கின்றனர்.இந்த அரண்மனையை வாங்க நீண்ட நாட்களாக முயற்சி செய்து வருகிறார் சரவணன். ஆனால் அரண்மனை சொத்தில் தனக்கும் பங்குண்டு என்பதை அறிந்து அதனை கைப்பற்ற சந்தானம் அங்கு வேலைக்காரராக சேர்கிறார்.இப்படியான நிலையில் சிலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். அரண்மனையில் ஏதோ மர்மம் இருப்பதாக அனைவரும் அறிகிறார்கள். அது ஹன்சிகாவின் ஆவி என தெரிய வருகிறது. இதனிடையே அங்கு வருகை தரும் சுந்தர்.சி எப்படி அந்த மர்மத்தை கண்டறிந்து பிரச்சினையில் இருந்து குடும்பத்தினரை காக்கிறார் என்பதே இப்படத்தின் கதையாகும்.


 கூடுதல் தகவல்கள் 



  • படத்தின் மிகப்பெரிய பலமாக பாடல்களை அமைந்தது. குறிப்பாக ‘பெட்ரோமாக்ஸ் லைட்’ பாடல் அந்த ஆண்டின் சிறந்த பாடல்களில் ஒன்றாக அமைந்தது. 

  • இப்படத்தில் பேய் வேடத்தில் ஹன்சிகா நடித்திருந்தார். சிறிது நேரமே வந்தாலும் அவரின் கேரக்டர் மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்றது. 

  • இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து  சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா நடிப்பில் அரண்மனை 2 என்ற பெயரிலும், ஆர்யா, ராஷிக்கண்ணா ஆகியோர் நடிப்பில் அரண்மனை 3 ஆகவும் வெளியாகியது. ஆனால் முதல் பாகத்தைப் போல 2ஆம் பாகம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 





மேலும் படிக்க:  Watch Video : பார்பி டாலுக்கு என்ன ஆச்சு! அம்மாவின் பாசத்தை அழகாக படம்பிடித்த பிக்பாஸ் பிரபலம்..