சீரியல் நடிகை என்பதையும் தாண்டி பிக்பாஸ் பிரபலம் என்றே பிரபலமாக அறியப்படுபவர் ஷிவானி நாராயணன். பிக்பாஸ் அவருக்கு சினிமா வாய்ப்பையும் பெற்று தந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக ஏராளமான ஃபாலோவர்களை பெற்று இருந்த ஷிவானி அவ்வப்போது போட்டோ, வீடியோ, ரீல்ஸ் என போஸ்ட் செய்து ரசிகர்களை போட்டு தாக்குவார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷிவானி கலந்து கொண்டபோது சக போட்டியாளரான பாலாஜி முருகதாஸ் உடன் நெருக்கமாக பழகி வந்தது பேரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர்களின் உறவு குறித்து பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகும் இருவரும் ஒன்றாக பல நிகழ்வுகளில் கலந்து கொண்டாலும் "நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்" என்பதையே பதிவு செய்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
சின்னத்திரை நடிகையாக இருந்த ஷிவானியின் தரம் சினிமா நடிகையாக உயர்ந்தது அதிலும் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதியின் மனைவிகளில் ஒருவராக ஷிவானி 'விக்ரம்' திரைப்படத்தில் நடித்திருந்தார். வீட்ல விசேஷம் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
என்ன தான் சினிமாவில் பிஸியான நடிகையாக மாறினாலும் இன்ஸ்டாகிராமில் சுறுசுப்பாக இருந்து வருகிறார். அவரின் டான்ஸ் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அந்த வகையில் இரு தினங்களுக்கு முன்னர் ஷிவானி நாராயணன் போஸ்ட் செய்த வீடியோ ஒன்றுக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
கடந்த வாரம் ஷிவானிக்கு விஸ்டம் டூத் ரிமூவலுக்கான சர்ஜரி நடைபெற்றது. அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஷிவானியின் அம்மா அவருக்கு சாப்பாடு ஊட்டிவிடுவதும், சிந்தும் உணவை பாசத்துடன் துடைத்துவிடுவதும், மாத்திரையை கொடுப்பதும், அதை ஷிவானி மிகவும் சிரமப்பட்டு சாப்பிடும் விடியோவை பகிர்ந்து அம்மாவின் அன்புதான் எல்லாமே! லவ் யூ அம்மா ! என போஸ்ட் செய்திருந்தார்
ஷிவானியின் இந்த போஸ்ட்டுக்கு ஏராளமான லைக்ஸ்களை குவிப்பதுடன் டேக் கேர் ஷிவும்மா என கமெண்ட் செய்து வருகிறார்கள் அவரின் ரசிகர்கள்..