வீரம் , வேதாளம் , விவேகம் , விஸ்வாசம், படத்தைத் தொடர்ந்து ஆறாவது முறையாக இணைகிறது அஜித் சிவா கூட்டணி. படத்தின் பெயர் என்னவென்று சொல்லுங்கள் பார்க்கலாம். ஒரு ஹிண்ட் தருகிறேன் படத்தின் பெயர் வி யில் தொடங்கி ம் இல் முடியும்.


வீரம் படத்தில் தொடங்கிய அஜித் சிவா கூட்டணி


சிவா மற்றும் அஜித்தின் கூட்டணி 2014 ஆம் ஆண்டு வெளியான வீரம் படத்தில் தொடங்கியது. ஒரே சமயத்தில் அஜித் குமாரை மாஸாகவும்  அதேநேரத்தில் ஃபேமிலி ஆடியன்ஸுக்கு பிடித்த மாதிரியும் அமைந்தது இந்தப் படம். இந்தப் படத்தைத் தொடர்ந்து தங்கை செண்டிமெண்டைமையமாகக் கொண்டு வெளியானது வேதாளம் திரைப்படம். இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்து உருவாக்கியத் திரைப்படமான விவேகம் படுதோல்வி அடைந்தது. அடுத்ததாக வெளியான விஸ்வாசம் திரைப்படம் அப்பா மகள் சென்டிமெண்டால் ரசிகர்களின் மனதை கவர்ந்தது.


சலிப்படைந்த ரசிகர்கள்


போதும் போதும் என்றளவிற்கு இந்த இருவர் கூட்டணியில்  படங்கள் வெளியாகிவிட்ட நிலையில் ஒரு மாற்றத்திற்காக இயக்குநர் எஹ் வினோத் இயக்கிய நேர்கொண்ட பார்வைத் திரைப்படத்தில் நடித்தார் அஜித். அடுத்ததாக வலிமை, துணிவு என அடுத்தடுத்து வினோத் இயக்கத்தில் நடித்த அஜித் குமார். தற்போது தடையாரத் தாக்க, மீகாமன் தடம் ஆகியப் படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அடுத்த மாதம் படப்பிடிப்புத் தொடங்க இருக்கும் நிலையில் அஜித்தின் அடுத்தப் படத்தின் தகவல் வெளியாகியுள்ளது.


ஆறாவது முறையாக கூட்டணி


 அஜித்தின் 63 ஆவது திரைப்படத்தை இயக்க இருக்கிறார் சிவா. இதற்கு சந்தோஷப்படுவதா சோகமடைவதா என்கிற குழப்பத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க இருக்கிறது. படக்குழு குறித்தான கூடுதலான தகவல் வெளியாக இருக்கிறது. ஒன்று மட்டும் ரசிகர்களுக்கு உறுதியாகத் தெரியும் . படத்தின் பெயர் வி யில் தொடங்கி ம் இல் முடியும் என்பது.


அஜித் குமார்


திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையில் பயங்கர பிசியாக இருந்து வருகிறார் நடிகர் அஜித். அண்மையில் ஏகே மோட்டோ டூர்ஸ் என்கிற பைக் சுற்றுலாக்களை ஒருங்கிணைக்கும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார் அஜித். பைக் ரைட் ஆர்வலர்கள் இந்த நிறுவனத்தில் தங்களை பதிவு செய்வதன் மூலம் உலகம் இந்தியா மற்றும் உலகம் முழுவதிற்குமான சுற்றுலா திட்டங்கள் வரையறுக்கப்பட்டு தரமான வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு குழுவாக பயணத்திற்கு செல்லலாம். மேலும் அஜித் குமார் இந்தியா முழுவதும் மேற்கொண்ட சுற்றுப் பயணம் குறித்த ஆவணப்படம் ஒன்றும் உருவாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா இந்த ஆவணப்படத்தை இயக்க இருக்கிறார்.