Alia Bhat : என்ன ஆச்சு இந்த ஆலியாவுக்கு...மாறி மாறி பேசுறாங்க... 'பிரம்மாஸ்திரா' படத்தின் விளம்பர பணிகள் மும்மரம் 


பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் ஆலியா பட் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கி கொண்டு தவித்து வருகிறார். பல படங்களில் மிகவும் பிஸியாக இருந்து வரும் ஆலியா பட் சமீப காலமாக ட்ரோல்களால் குறிவைக்கப்பட்டுள்ளார். 


'பிரம்மாஸ்திரா' திரைப்படம்:


அயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர், ஆலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'பிரம்மாஸ்திரா'. சமீபத்தில் தான் இப்படத்தில் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் மற்றும் கரண் ஜோஹர் இணைந்து தயாரிக்கும் இப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகிவருகிறது. இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்காக காத்து கொண்டு இருக்கும் ஆலியா சில காரணங்களால் சமூக ஊடகத்தில் மிகவும் ட்ரெண்டிங் ஆனார். 



'பாய்காட்' ஹேஷ்டேக் சம்பவம் :


சமீபத்தில் ஆலியா ஒரு நிகழ்ச்சியின் போது கூறிய சில அறிக்கைகள் நெட்டிசன்களை மிகவும் எரிச்சல் அடைய செய்தது. அதனால் அவர்கள் 'பாய்காட்' ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யத் தொடங்கிவிட்டனர். இதற்கு காரணம் ஆலியா "என்னை பிடிக்கவில்லை என்றால் என்னை பார்க்க வேண்டாம்" என்று கூறிய அந்த ஸ்டேட்மென்ட்தான் காரணம். அவர் அப்படி பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி காட்டுத்தீ போல் பரவியது. இதனால் வெளிவரவிருக்கும் 'பிரம்மாஸ்திரா' படத்தைப் புறக்கணிக்க போவதாக கூறினார்கள் நெட்டிசன்கள். இந்த சர்ச்சையால் மிகவும் அதிர்ச்சியடைந்த ஆலியா எங்கு படம் வெளியாவதில் சிக்கல் ஏதாவது ஏற்படுமோ என்று அச்சுறுத்தலில் இருக்கிறார். 


 






தமிழ் ஹீரோஸ் சூப்பர் புகழ்ந்த ரன்பீர்:


'பிரம்மாஸ்திரா' படத்தின் வெளியீட்டு நாள் நெருங்கி கொண்டு இருப்பதால் படத்தின் பாடல் ஒன்றை நாளை வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். சென்னையில் படத்தின் விளம்பர பணிகளில் ஈடுபட்டுள்ள போது தமிழ் ஹீரோக்கள் பற்றி சில கருத்துகளை பகிர்ந்துள்ள ரன்பிர். ரஜினிகாந்தின் ஸ்டைல், கமல்ஹாசனின் அப்பு கதாபாத்திரம், அஜித்தின் ஸ்டைல் மற்றும் தன்னடக்கம், விஜயின் டான்ஸ் மற்றும் பாடல் என அனைத்து ஹீரோக்களின் ஸ்பெசாலிட்டி குறித்தும் பகிர்ந்தார். 


ஆலியாவின் லேட்டஸ்ட் நியூஸ்:


மேலும் ஆலியா பட் நிறைய தமிழ் திரைப்படங்களை பார்பராம். சமீபத்தில் அவர் பார்த்ததில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இளைய தளபதி விஜயின் "மாஸ்டர்" திரைப்படமும் கமல்ஹாசனின்" விக்ரம்" திரைப்படமும் மிகவும் பிடித்திருந்ததாம். மேலும் தமிழ்நாடு மக்கள் மிகவும் அன்பானவர்கள் மற்றும் தாழ்மையானவர்கள் என்று கூறியுள்ளார். 


 






என்ன ஒரு ட்விஸ்ட்: 


தமிழ்நாடு மக்களை பற்றிய ஆலியாவின்  இந்த கருத்தை கேட்டு ஷாக்கான நெட்டிசன்கள் படம் வெளிவர போகிறது என்பதால் இந்த தன்னடக்கமோ என்று மறுபடியும் ட்ரோல் செய்து வருகிறார்கள்.  'பிரம்மாஸ்திரா' திரைப்படம் செப்டம்பர் 9ம் தேடி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.