தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என அழைக்கப்படுபவர் ஷங்கர். ஷங்கர் கடந்த 1993 ஆம் ஆண்டு ஜெண்டில்மேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. தனது 28 ஆண்டுகால சினிமா பயணத்தில் கோலிவுட்டின் முன்னணி இயக்குநராக ஷங்கர் வலம் வருகிறார். தான் சினிமாவில் பெரியளவில் சாதித்திருந்தாலும் ஷங்கரின் குடும்பத்தினர் யாரும் சினிமா பக்கம் வராமலேயே இருந்தனர். 




இந்நிலையில்தான் ஷங்கரின் மகள் அதிதி,முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன் படத்தில் நடித்து வருகிறார்.  ஷங்கரின் வாரிசு திரையுலகுக்கு வந்துவிட்டதே என ஆச்சரியப்பட்டு ஓய்வெடுப்பதற்குள் அடுத்த தகவல் வெளியாகியுள்ளது. ஷங்கரின் மகனும் திரையுலகில் கால்பதிக்கவுள்ளாராம்.





ஷங்கரின் மகனான் அர்ஜித் ஷங்கர் விரைவில் தமிழ் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார் என்றும், இயக்குநர் பாலாஜி சக்திவேல் அவரை இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


காதல், வழக்கு எண் 18/9 உள்ளிட படங்கள் மூலம் கவனிக்க வைத்தவர் பாலாஜி சக்திவேல்.  சினிமாவில் தன்னுடைய கால்தடத்தை அழுத்தமாக பதிக்க வேண்டுமென்பதால் மிகச்சரியான ஸ்கிரிப்டை தேர்ந்தெடுத்து அதற்கான நடிப்பு பயிற்சியிலும் அர்ஜித் ஷங்கர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 




இயக்குநர் ஷங்கர் தற்போது ராம்சரண் நடிக்கும் பெயரிடப்படாத  படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக RC15 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தெலுங்கு பட உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் தில் ராஜூ தயாரிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். தயாரிப்பாளர் தில் ராஜூவின் 50வது திரைப்படமான இதற்கு இசையமைப்பாளராக இசையமைப்பாளர் தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண