தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என அழைக்கப்படுபவர் ஷங்கர். 28 ஆண்டுகால இயக்குநர் பயணத்தை நிறைவு செய்திருக்கும் ஷங்கர் இன்று (ஆகஸ்ட் 17) தனது  58 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். ஷங்கர் குறித்த சில சுவாரஸ்ய சம்பவங்கள் குறித்து பார்க்கலாம்.





ஷங்கர் அவர்களில் தாயார் சிவாஜியின் தீவிர ரசிகராம். ஒரு படத்தில் சிவாஜி காதாபாத்திரத்தின் பெயர் ‘ஷங்கர்’ என இருந்திருக்கிறது. அதன் மூலம் ஈர்க்கப்பட்டுதான்  தனது மகனுக்கு ‘ஷங்கர்’ என பெயர் வைத்தாராம்.


ஷங்கருக்கு இயக்குநர் ஆக வேண்டும் என்பது ஆரம்ப கால விருப்பம் இல்லையாம். விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக சினிமாவில் கால் பதித்த இவர் அந்த படத்திற்கு பிறகு தான் ஒரு நடிகராகிவிட வேண்டும் என தீர்க்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார்.





ஷங்கர் கடந்த 1993 ஆம் ஆண்டு ஜெண்டில்மேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. தனது 28 ஆண்டுகால சினிமா பயணத்தில் கோலிவுட்டின் முன்னணி இயக்குநராக ஷங்கர் வலம் வருகிறார்.


ஷங்கர் இயக்கத்தில் மிகப்பெரிய சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த  படங்கள் இந்தியன் மற்றும் எந்திரன் . இதில்  இந்தியன் படம் ரஜினிக்காவும், எந்திரன் படம் கமலுக்காகவும் எழுதிய படங்களாம். ஆனால் இறுதியில் இரண்டும் மாறிவிட்டன!


இன்றளவும்  ஃபிரஸ் ஃபீல் கொடுக்கும் முதல்வன் படத்தை முதலில் விஜய்யிடம்தான் கூறியிருக்கிறார் ஷங்கர். ஆனால்  அவரது கால்ஷீட் கிடைக்காததால் பின்னர் அர்ஜூனிடம் வந்திருக்கிறது. ஆனால் அர்ஜூனும் ஏதோ அரசியல் கதைக்களம் போல என ஒன்லைன் கேட்டவுடன் மறுத்துவிட்டாராம். அதன் பின்னர் படம் குறித்து விரிவாக விளக்கியதும்தான் ஓகே சொன்னாராம்


படங்களில் ஆக்‌ஷன் காட்சி எடுக்கும் பொழுது அதீத கவனத்துடனும் பதற்றத்துடனும் இருப்பாராம் ஷங்கர் , அப்படி இருந்தும் இந்தியன் 2 படப்பிடிப்பின் போது பிரம்மாண்ட செட் அமைத்து காட்சிகள் படமாக்கப்பட்ட பொது கிரேன் விழுந்து இருவர் பலியான சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் இருந்து ஷங்கர் மீளவே சிறிது காலம் எடுத்ததாம். இன்றளவும் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் தடைப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.




படத்தை நுணுக்கமாக எடுக்க வேண்டும் என்பதில் ஆர்வம் உள்ளவர் ஷங்கர் .  இந்தியன் படத்தில் கமலுக்கு வயதான தோற்றத்துடன் கூடிய டிரையல் மேக்கப் போட்டு அவரை அழைத்துக்கொண்டு பேருந்தில் பயணித்தாராம். அப்போது கமலை யாரும் அடையாளம் காணவில்லை என்பதால் அந்த மேக்கப்பிற்கு ஓகே சொன்னாராம். அதே போல அந்நியன் படத்திற்காக கர்நாடக சங்கீதம் முறையாக கற்றுக்கொண்டாராம் ஷங்கர்.