கடலூர் அடுத்த சின்னப்பன் முதலியார் தெருவை சேர்ந்தவர் சந்திப் சுகன்யா தம்பதியின் 3 வயது குழந்தையான மித்ரா 2 வயதில் பேசத் தொடங்கியுள்ளார். அதிகமாக கற்கும் திறனும்,பேசும் திறனும் கொண்டுள்ள மித்ராவிற்கு தாய் சுகன்யா பொதுஅறிவு மற்றும் தலைவர்கள் பெயர், ஆத்திச்சூடி, திருக்குறள், ஆங்கில ஆல்பபெட், மாவட்டங்களின் பெயர்கள் உள்ளிட்ட பலவகை சொற்களை சொல்லி கொடுத்து பயிற்சி கொடுத்துள்ளார். சிறு வயது முதல் வேகமாக பேசக்கூடிய திறமை கொண்ட சிறுமியிடம் துரிதமாக கற்றுக்கொள்ளும் திறனை இருப்பதைக் கண்ட பெற்றோர்கள் சிறுமிக்கு திறமைக்கு அங்கிகாரம் கிடைக்கும் வகையில் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் விண்ணப்பித்தனர்.

 


 

இந்தியன் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் இல் விண்ணப்பிக்கும் முறையானது கொரோனா பேரிடர் காலகட்டத்தின் காரணமாக விண்ணப்பிக்கும் முறைகளும் அதன்பின் அதனை சரிபார்க்கும் முறைகளும் மாற்றப்பட்டுள்ளது, தற்பொழுது இருக்கும் வழிமுறைகளின்படி விண்ணப்பிப்போர் இந்தியன் பூக் ஆஃப் ரெகார்ட்ஸ் இணையதளத்தில் பதிவு செய்து பின் அவர்கள் அதனை சரிபார்த்த பின் நாம் அனுப்பியதற்கான ஆதாரங்களையும் காணொலியாக அவர்களுக்கு அனுப்ப வேண்டும் அதன் பின் அவர்கள் தகுதிகளை சரிபார்த்து பின் தகவல் தெரிப்விப்பர்.

 


 

அதன்படி 60 நொடிகளில் தலைவர்களின் பெயர்கள் கூறுவது மற்றும் ஆத்திச்சூடி, திருக்குறள், ஆங்கில A-Z,சோலார் ஸ்டெம் 9 வகை, ஸ்லோகன், ஆகியவை பேசி 30 வீடியோ அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் சிறுமி மித்ரா திறமையை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்து சிறுமி மித்ராவிற்ககு இந்தியன் புக் ஆஃ ரெக்கார்டு கான விருது வழங்கியுள்ளது. இதுகுறித்து தாய் சுகன்யா கூறுகையில் எனது குழந்தை சிறு வயதில் இருந்தே அதிகமாக பேசும் திறமை கொண்டுள்ளதால் அவளது திறமையை அதிகரிக்கும் வகையில் அவளுக்கு திருக்குறள், ஆத்திச்சூடி தலைவர்கள் பெயர், மாவட்டங்களின் பெயர் என அனைத்தையும் கற்றுக் கொடுத்தும் அதனை சட்டென்று புரிந்து கொண்ட மித்ரா இன்னும் பல விஷயங்களை உடனே கற்றுக்கொண்டார். இதனை அங்கீகரிக்கும் வகையில் கடந்த மாதம் இந்தியன் புக் ஆப் ரெக்கார்டுக்கு விண்ணப்பித்து இருந்தோம் அவர்கள் 30 வகையான வீடியோக்களை அனுப்பியிருந்தோம் பின்னர் எனது குழந்தைக்கு விருது வழங்கி சான்றிதழ் கொடுத்தள்ளனர்.

 


 

மேலும் கின்னஸ் சாதனைக்கு பயிற்சி அளித்து வருகிறோம் என்னுடைய மகள் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவார் என நம்புகிறேன் அதற்கான பயிற்சியும் நாங்கள் கொடுத்து வருகிறோம் என்று கூறினார். இப்பொழுது இருக்கும் கொரோனா காலகட்டத்தில் வீட்டில் உள்ள குழந்தைகள் வெளியே சென்று விளையாட முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர் அவ்வாறு இருக்கும் நிலையினை பயன்படுத்தி இதுபோல் அறிவுசார் கல்வியினை பெறுவது குழந்தைகளுக்கு மிகவும் சிறந்ததாகும்.