சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியன் 2 படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் ஷங்கர். இது இணையத்தில் வைரலாகியுள்ளது. 


இந்தியன்


கடந்த 1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் “இந்தியன்”. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். அந்த காலக்கட்டத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இன்றளவும் பேசு பொருளாகவே உள்ளது. 


இதனிடையே 22 ஆண்டுகள் கழித்து கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியன்  2 குறித்த அறிவிப்பு வெளியானது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.  இந்த படம் பல பிரச்சினைகளை கடந்து கடந்தா ஆண்டு முதல் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. 2024 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு படம் வெளியாகலாம் என கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல்  இதனிடையே அவ்வப்போது இந்தியன் 2 அப்டேட் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. 


வந்துவிட்டார் இந்தியன் தாத்தா


இந்நிலையில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியன் 2 படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் ஷங்கர். இந்தியன் முதல் பாகத்தில் நாம் பார்த்த அதே இந்தியன் தாத்தா மூவர்ண பலூன்களுக்கு இடையில் நின்றவாறு ஏதோ சதிதிட்டம் தீட்டிக் கொண்டிருப்பது போன்ற ஒரு போஸ்டர் இது. இதனால் கமல் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளார்கள்.






பிரம்மாண்டங்களால் நிறைந்த இந்தியன் 2.


ஷங்கர் இயக்கும் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு பெரிய நடிகர் பட்டாளமே இருக்கிறது கமல்ஹாசன் ரகூல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், ஐஷ்வர்யா ராஜேஷ், குரு சோமசுந்தரம், எஸ். ஜே, சூர்யா, சித்தார்த் சமுத்திரகனி, பாபி சிம்ஹா மேலும் இந்த படத்தில் கமலுக்கு  7 வில்லன்கள் நடிக்கிறார்கள் என்பதை நேர்காணல் ஒன்றில் இயக்குநர் ஜி.மாரிமுத்து உறுதிப்படுத்தினார். அவர்கள் சமுத்திரகனி, பாபி சிம்ஹா, சித்தார்த், குரு சோமசுந்தரம், ஜி.மாரிமுத்து, ஜெயபிரகாஷ், கிஷோர் ஆகியோர் என சொல்லப்படுகிறது. 


டீ.ஏஜிங்


கமலை கிட்டதட்ட  20 ஆண்டுகள் இளமையாக இந்தப் படத்தில் நாம் பார்க்கவிருப்பதாகவும், இதற்காக டீ ஏஜிங் என்று சொல்லப்படும் வயதைக் குறைக்கும் தொழில்நுட்பம் பயன்படுத்த ஷங்கர் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.  இதற்காக அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள லோலா ஸ்டுடியோஸில் இதற்கான பனிகள் நடைபெற்ற வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.