Cauvery Water: "தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கப்படும்" - பாஜகவின் கோரிக்கையை நிராகரித்த கர்நாடக துணை முதலமைசர்!

Cauvery Water: தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடப்படும் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

Cauvery Water: தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடப்படும் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கர்நாடக மாநில துணை முதலமைச்சர்  இன்று காலை கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ”தமிழ்நாட்டிற்கு 10 டி.எம்.சி. தண்ணீர் திறக்க முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. கடந்த ஆண்டு மழைப்பொழிவு அதிகமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் சுமார் 400 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்தது. மேகதாது அணை இருந்திருந்தால் தமிழ்நாடு எதிர்பார்க்கும் தண்ணீரை  இப்போது திறந்து விட்டிருக்க முடியும். எனவே மேகதாது அணை திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். மேகதாது அணை இருந்தால் இரு மாநிலங்களின் நீர் தேவையும் பூர்த்தி ஆகும்” என தெரிவித்தார். 

நேற்று கர்நாடக மாநில பாஜக தலைவர் பசவராஜ் பொம்மை, கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாருக்கு எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டிற்கு நீர் திறந்து விடக்கூடாது என கூறியிருந்ததையடுத்து, டி,கே, சிவக்குமார் தண்ணீர் திறந்துவிட ஒப்புதல் அளித்துள்ளதால், பாஜகவின் கோரிக்கையை காங்கிரஸ் திட்டமிட்டே புறக்கணித்துள்ளதாக பேச்சுகள் அடிபடுகிறது.

நதி நீர் பங்கீடு:

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கடந்த 9ஆம் தேதி வரை 37.9 டி.எம்.சி தண்ணீர் வரையில் தமிழ்நாட்டுக்கு கர்நாடகா தர வேண்டும். ஆனால், 3 டி.எம்.சி. தண்ணீர்தான் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.  இதனால், தமிழ்நாட்டிற்கான நீரை உடனடியாக வழங்க வேண்டும் என கர்நாடக அரசை, தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.  ஆனால் இதற்கான நடவடிக்கை கர்நாடக அரசு முன்வரததால் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. காவிரி நீரை பகிர்ந்து கொள்ளும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் மனு:

அந்த மனுவில், ஜூன், ஜூலை மாதங்களில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய 28.8 டி.எம்.சி நீரை திறந்துவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது தமிழ்நாடு அரசு. தற்போது 24 ஆயிரம் கன அடி நீர் விகிதம் தண்ணீரை உடனடியாக திறந்து விட கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல வரும் மாதம் திறக்க வேண்டிய 36.76 டி.எம்.சி நீரை காலம் தாழ்த்தாமல் உரிய நேரத்தில் திறந்து விடவும் கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரத்தில் காவிரி நீர் ஆணையத்தையும் ஒரு எதிர் மனுதாரராக இணைத்து உரிய உத்தரவை ஆணையத்துக்கும் உச்சநீதிமன்றம் வழங்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி உரிய நீரை திறந்து விடக் கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். காவிரி ஆணையம் பாகுபாட்டோடும், ஒரு தலை பட்சமாகவும் செயல் படக் கூடாது என உத்தரவிட வேண்டும். மேலும், 113 பக்கங்களை கொண்ட விரிவான மனுவை தாக்கல் செய்தது தமிழ்நாடு அரசு. காவிரி நீர் விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் எழுதிய கடிதங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தமிழ்நாடு அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

Continues below advertisement