தமிழ் சினிமாவில் பிரமாண்டம் என்ற வார்த்தைக்கு அர்த்தமே இயக்குனர் ஷங்கர் தான் எனும் அளவிற்கு பிரபலம் அடைந்தவர். இன்று இந்த பிரமாண்ட இயக்குனருக்கு பிறந்தநாள். "ஹாப்பி பர்த்டே ஷங்கர் சார்"


ஆரம்பமே அட்டகாசம் தான்:


1993ல் ஆண்டு தனது முதல் படமான "ஜென்டில்மேன்" திரைப்படத்திலேயே திரை ரசிகர்களை அனைவரையுமே கிளீன் போல்ட் ஆகியவர் இயக்குனர் ஷங்கர். அறிமுகமான முதல் திரைப்படமே அவருக்கு சிறந்த இயக்குனருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும், பிலிம்பேர் விருதையும் தட்டி சென்றவர். 



தொடர் வெற்றிகள் :


தமிழ் சினிமா உலகில் அடி எடுத்து வைத்து 25 ஆண்டுகளுக்கு மேலானாலும் இன்றும் அவரின் கிட்டத்தட்ட அனைத்து படங்களுக்கும் சூப்பர் ஹிட் படங்கள் தான். ஒரு சில படங்கள் மட்டுமே வசூல் ரீதியாக தோல்வியடைந்தாலும் இன்றும் இது இயக்குனர் ஷங்கர் படம் என்று பார்த்த உடனேயே தெரிந்துவிடும் அளவிற்கு பிரபலமான படங்கள். அவரின் வெற்றி விகிதம் இன்றும் கூடி கொண்டே தான் உள்ளது. பல சமூகம் சார்ந்த பிரச்சனைகளை மையமாக வைத்து திரைக்கதையை அமைத்து அது மக்களுக்கு எளிய வகையில் கொண்டு சேர்ப்பதில் வல்லவர் இயக்குனர் ஷங்கர். அதற்கு எடுத்துக்காட்டு ஜென்டில்மேன், இந்தியன், முதல்வன் போன்ற படங்கள். 


மாஸ் ஹீரோக்களுக்கு ஏற்ற மாஸ் டைரக்டர் :


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், விக்ரம் போன்ற நடிகர்களை இயக்கியவர். அந்த நடிகர்களிடம்  இருந்து மக்கள் என்ன எதிர்பார்ப்பு இருக்கும் என்பதை அறிந்து அதை மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் திரைக்கதையோடு இணைக்கும் சாமர்த்தியசாலி.இயக்குனர் ஷங்கர். சீரியஸ் திரைக்கதையாக  இருந்தாலும் அவரின் படங்களில் நகைச்சுவைக்கு குறைவே இருக்காது. கவுண்டமணி, செந்தில், சந்தானம், வடிவேலு, விவேக் என அனைத்து காமெடி ஜாம்பவான்களை மிக சிறப்பாக தனது படங்களில் பயன்படுத்தி இருப்பார். 


பிரம்மாண்டத்தின் உச்சக்கட்டம் :


படங்களில் வரும் காட்சிகள் மட்டுமின்றி பாடல், சண்டை மற்றும் கனவு காட்சிகள் கூட பிரம்மாண்டத்தின் உச்சகட்டமாக இருக்கும். நாம் நினைக்காததை கூட திரையில் மிக அழகாக கற்பனையை மிஞ்சும் அளவுக்கு வெளிப்படுவது இயக்குனர் ஷங்கரால் மட்டுமே முடியும். இந்திய சினிமா ரசிகர்களை மட்டுமின்றி உலக சினிமா ரசிகர்கள் மத்தியிலும் தமிழ் சினிமாவின் மதிப்பை தூக்கிநிறுத்திய பெருமை இயக்குனர் ஷங்கரையே சேரும். 


 






தரமான தயாரிப்பாளர் ஷங்கர்:


சிறப்பான இயங்குனர் மட்டுமின்றி ஒரு தரமான தயாரிப்பாளர். முதல்வன், வெயில், காதல் போன்ற படங்கள் சங்கர் தயாரித்த ஒரு சில வெற்றி படங்கள். அது மட்டுமின்றி நடிகர் வடிவேலுவை வைத்து அதிக பொருட்செல்வதில் அமைத்த ஒரு வெற்றி படம் தான் "இம்சை அரசன் 23ம் புலிகேசி" இதை தயாரித்தவரும் அவர் தான். சினிமா துறையில் நுழைந்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் இப்போது தான் மற்ற மொழிப்படங்களில் கவனம் செலுத்துகிறார். டோலிவுட் நடிகர் ராம்சரண் வைத்து ஒரு படமும் பாலிவுட்டில் நடிகர் ரன்வீர் சிங் உடன் இனைந்து அந்நியன் படத்தின் ரீ மேக் படத்தையும் இயக்கியுள்ளார். இந்தியன் 2 படமும் தற்போது தயாராகிவருகிறது. இந்த படங்கள் அனைத்தும் நிச்சயம் சூப்பர் ஹிட் படங்களாக அமையும். 


 






திரைபிரபலங்கள் பலரும் இயக்குனர் ஷங்கருக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை சமூகவலைத்தளங்களில் பகிந்து வருகிறார்கள்.  மேலும் மேலும் இயக்குனர் ஷங்கர் பல சாதனைகளை நிகழ்த்தவும் தனது வெற்றியை என்றும் நிலை நாட்டவும் அவரின் இந்த பிறந்தநாள் அன்று மனதார வாழ்த்துவோம். ஹாப்பி பர்த்டே ஷங்கர் சார்...