ஆஃபிஸ்ல இருந்து யாருமே கல்யாணத்துக்கு வரல! கடுப்பில் மணப்பெண் எடுத்த பகீர் முடிவு!

திருமணத்திற்கு சக ஊழியர்கள் வராததால் இளம் பெண் ஒருவர் எடுத்த முடிவு வேகமாக வைரலாகி வருகிறது.

Continues below advertisement

திருமணங்கள் என்றால் எப்போதுமே பெரிய வகை கொண்டாட்டம் தான். தம்பதிகள் இருவரும் தங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ மகிழ்ச்சியாக தங்களுடைய வாழ்க்கை இணையும் படலத்தை தொடங்குவார்கள். இதற்காக பல மாதங்கள் ஏற்பாடுகள் நடைபெறுவது வழக்கம். திருமணத்தில் முக்கியமான விஷயம் சாப்பாடு தான். அந்த சாப்பாடு ஏற்பாட்டிற்கு இரு வீட்டு நபர்களும் தீவிரமாக ஆலோசனை நடத்தி முடிவை எடுப்பார்கள். 

Continues below advertisement

இந்நிலையில் ஒரு பெண் தன்னுடைய திருமணத்திற்கு சக ஊழியர்கள் வரவில்லை என்பதற்காக விபரீத முடிவை எடுத்துள்ளார். சீனாவின்  ஒரு பகுதியில் இளம் பெண் ஒருவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு கொரோனா காலம் என்பதால் அப்பெண் குறைவாக விருந்தினர்களை அழைத்ததாக கூறப்படுகிறது. 

குறிப்பாக தன்னுடைய அலுவலகத்தில் உடன் பணியாற்றும் 70 நபரை திருமணத்திற்கு அழைத்துள்ளார். அவர்களுக்கு தேவையான உணவையும் தயார் செய்துள்ளார். இந்தச் சூழலில் அவருடைய திருமணத்தன்று உடன் பணியாற்றும் நபர்களில் ஒருவர் மட்டுமே வந்துள்ளார். இதனால் அவர் திருமணத்திற்காக ஏற்பாடு செய்து வைத்திருந்த சுமார் 6 டேபிள்கள் நிறையே சாப்பாடு வீணாகியுள்ளது. 

இதன்காரணமாக அந்தப் பெண் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தன்னுடைய திருமணம் முடிந்த அடுத்த நாளில் அப்பெண் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். அதாவது அவர் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துள்ளார். தன்னுடைய ராஜினாமா கடிதத்தில் தன் திருமணத்திற்கு உடன் பணியாற்றும் நபர்கள் யாரும் வரவில்லை என்று கூறி ராஜினாமா செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இவரின் இந்தச் செயல் தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்தை பலரும் தெரிவித்து வருகின்றனர். 

திருமணத்திற்கு வராத விருந்தாளிகளுக்கு ரூ.17 ஆயிரம் பில் அனுப்பிய தம்பதி:

அமெரிக்காவின் சிகாகோ பகுதியைச் சேர்ந்த டக் மற்றும் டெட்ரா சிம்மன்ஸ் ஆகிய இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களின் திருமணம் ஜமைக்காவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் பிரத்யேக ஏற்பாடு உடன் மிகவும் ஆடம்பரமாக நிகழ்ந்துள்ளது. இந்த திருமணத்திற்கு அத்தம்பதி நல்ல செலவு செய்துள்ளனர். மேலும் கொரோனா காலம் என்பதால் முன்பாகவே எத்தனை பேரை கூப்பிட வேண்டும் என்று தீர்மானித்து அவர்களுக்கு மட்டும் சரியாக உணவு உள்ளிட்ட மற்ற வசதிகளை அந்த விடுதியில் செய்திருந்தனர். 

அப்படி இருக்கும் பட்சத்தில் இருவர் தங்களுடைய திருமணத்திற்கு வருவதாக கூறிவிட்டு கடைசி நிமிடத்தில் வராமல் இருந்துள்ளனர். எனவே அவர்களுக்காக முன்பதிவு செய்யப்பட்ட உணவு மற்றும் இதர வசதிகள் அனைத்தும் வீணாகியுள்ளது. எனவே இதற்கு ஏற்பட்ட செலவை உரிய நபர்களிடம் வசூலிக்க அத்தம்பதி முடிவு செய்துள்ளது. அதன்படி அந்த நபர்களுக்கு உணவு மற்றும் இதர வசதிகளுக்கு ஏற்பட்ட செலவாக 240 அமெரிக்க டாலர் தரவேண்டும் என்று ஒரு பில் உடன் மின்னஞ்சல் செய்திருந்தனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண 

Continues below advertisement