Director Shaji Kailas | மோகன்லாலை இயக்கவுள்ள அஜித் பட இயக்குநர்.. வெளியான தகவல்!

சுமார் 12 வருடங்களுக்குப் பிறகு ஷாஜி கைலாஸ், நடிகர் மோகன்லாலை இயக்குகிறார். பல்வேறு மலையாளப் படங்களை இயக்கிய ஷாஜி கைலாஸ் பல்வேறு தமிழ்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Continues below advertisement
மலையாள மனங்களை பெரிதும் கொள்ளையடித்தவர்  மோகன்லால்.  கம்ப்ளீட் ஆக்டர் என்றும் லால் ஏட்டன் என்றும் ரசிகர்களால் கொஞ்சப்படுகிறார். தமிழ், மலையாளங்களில் கலக்கிய மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாராக மோகன்லால் வலம் வருகிறார். சுமார் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து நடிகராக உச்சத்தில் இருந்துவருகிறார்.



சினிமாத்துறையில் பல்வேறு விருதுகளை பெற்ற நடிகர் மோகன்லால் தனது அடுத்த படத்திற்காக பல்வேறு விருதுகளை பெற்ற திரைப்பட இயக்குநருடன் பணியை தொடர்கிறார், என ரசிகர்களுக்கு பூஸ்ட் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. இதை உறுதி செய்யும் விதமாக புகைப்படத்துடன் அவரே பதிவிட்டுள்ள பதிவு டிரெண்டாகி வருகிறது. அதே போல்  நடிகர் ப்ரித்விராஜின் இயக்கத்தில் தான் நடிக்கும் ‘ப்ரோ டாடி’ படத்தில் தனது பகுதிகளை மோகன்லால் வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
[tw]
[/tw]

 நடிகர் மோகன்லால் இயக்குனர் ஷாஜி கைலாஸுடன் இணைந்து நடிக்கிறார். இதற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. மோகன்லால் சமூக ஊடகங்களில் தனது அடுத்த புகைப்படத்தை அறிவிக்க இயக்குனர் ஷாஜியுடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார்.  இந்த படத்திற்கு ராஜேஷ் ஜெயராம் திரைக்கதை எழுதுவார் எனவும் குறிப்பிட்டுள்ளார். அக்டோபர் 2021-ல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படத்தை ஆசீர்வாத் சினிமாஸ் பேனரில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கிறார்.


சுமார் 12 வருடங்களுக்குப் பிறகு ஷாஜி கைலாஸ், நடிகர் மோகன்லாலை இயக்குகிறார். பல்வேறு மலையாளப் படங்களை இயக்கிய ஷாஜி கைலாஸ் தமிழில் அஜித்தின் ஜனா, எல்லாம் அவன் செயல் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!

Continues below advertisement
Sponsored Links by Taboola