ராம் கோபால் வர்மா


1989 ஆம் ஆண்டு நாகார்ஜூனா நடித்த சிவா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானர் ராம் கோபால் வர்மா.  தெலுங்கு, இந்தி மொழிகளில் இதுவரை 50 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள அவர் சர்ச்சைக்குரிய இயக்குநர் என பெயரெடுத்தவர். இந்தியில் ராம் கோபால் வர்மா இயக்கிய ரங்கீலா, சத்யா உள்ளிட்ட படங்கள் தமிழ்நாட்டில் சூப்பர் ஹிட்டாக படமாக அமைந்தது. மேலும் சர்கார், சர்கார் ராஜ், கம்பெனி, நிஷாப்த், ஆக், டிபார்ட்மென்ட், ரத்த சரித்ரா மற்றும் நாச் உள்ளிட்டவை அவரது இயக்கத்தில் வெளியான மிக முக்கியமான திரைப்படங்களாகும். 


இயக்கம் மட்டுமின்றி பல படங்களில் தயாரிப்பாளராகவும் அவர் மாறியுள்ளார். மேலும் 2019 ஆம் ஆண்டு கோப்ரா படத்தின் மூலம் நடிகராகவும் ராம் கோபால் அறிமுகமானார். அடிக்கடி சர்ச்சையாகவும் பேசி சிக்கும் அவர்  நைனா கங்குலி, அப்சரா ராணி, ராஜ்பால் யாதவ், மிதுன் புரதாரே உள்ளிட்ட பலரையும் வைத்து Dangerous என்ற படத்தை இயக்கியிருந்தார்.


தன் பாலின ஈர்ப்பு காதலை மையமாக வைத்து பெண்களை முதன்மை கேரக்டரில் நடிக்க வைத்து எடுக்கப்பட்ட இப்படம் கடும் விமர்சனங்களை சந்தித்தது. படத்தில் இடம்பெற்ற ஆபாச காட்சிகளுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ச்சியாக காட் செக்ஸ் & ட்ரூத் , க்ளைமேக்ஸ் , நேகட் உள்ளிட்டப் படங்கள் அடுத்தடுத்த சர்ச்சைக்கு உள்ளாகின.


தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து பல படங்களுக்கு கருத்து தெரிவித்து வருகிறர். சமீபத்தில் வெளியான அனிமல் படத்தை இந்திய சினிமாவில் மிக முக்கியமான படம் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். 


மேலும் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் ஜெய் ஹோ பாடலுக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கவில்லை என்று அவரது கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது


விஜய் சேதுபதியை சந்தித்த ராம் கோபால் வர்மா






தொடர்ச்சியாக தமிழ் சினிமாவை கவனித்து வரும் ராம் கோபால் வர்மா தற்போது நடிகர் விஜய் சேதுபதியை நேரில் சென்று சந்தித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் விஜய் சேதுபதியுடம் புகைப்படம் வெளியிட்ட அவர் “ விஜய் சேதுபதியை நிறைய திரையில் பார்த்திருக்கிறேன். திரையில் பார்த்ததை விட நேரில் அவர் சிறப்பான மனிதராக இருக்கிறார்” என்று பதிவிட்டுள்ளார்.


மேலும் ராம் கோபால் வர்மா விஜய் சேதுபதிக்கு கதை ஏதும் சொல்லி இருக்கிறாரா என்கிற கேள்வியும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.