கார்த்தியின் அடுத்தப்படத்தை இயக்குவதை பெருமையாக நினைப்பதாக இயக்குநர் ராஜூமுருகன் பேசியுள்ளார். 


ராஜூ முருகன் பேசும் போது, “என்னோட கதை சொல்றதுக்காக நான் கார்த்தி சார சந்திக்க தேனி போயிருந்தேன். அந்த கதையை கேட்ட அவரு, ஒரு டியூன போட்டு இதுக்கு பாட்டு எழுதி கொடுக்கணும்னு சொன்னாரு. தீரன்ல கார்த்தி சாருக்கு ஒரு பாட்டு எழுதுனேன்.


இந்தப்படத்துல முத்தையாட்ட பாட்டு பத்தி பேசுனோம். அப்படி பேசி பேசி 3 பாட்டு எழுதிட்டேன். அவசர அவசரமா முத்தையா பாட்டு வாங்கினாரு. அதில ஒரு பாட்டு இளையராஜா சார் பாடி இருக்காரு. அப்படியான ஒரு மொமண்டை உருவாக்கி கொடுத்த படக்குழுவுக்கு என்னோட நன்றி. ஒரு கதை அதன் சனங்களை பற்றி பேசும் போது முக்கியத்துவம் பெற்றதாக மாறுகிறது. கார்த்தியோட அடுத்தப்படம் பண்ணப்போறேன். அந்தப்படம் சினிமாவில் எனக்கு லெர்னிங் ப்ராசஸா இருக்கும். 




அவர்கிட்ட நிறைய கத்துக்கிறேன். எப்போது ஃபுல் சார்ஜ் போட்ட பேட்டரி மாதிரி இருப்பாரு. அவர் பின்னாடி ஓடுறது ரொம்ப பெரிய டாஸ்க். சமூகத்திற்கு தேவையான உழவன் அறக்கட்டளை மூலம் நல்ல விஷயங்களை செய்யும் நல்ல மனிதர். அவரோட அடுத்தப்படத்தில் இணைவது பெருமையாக இருக்கு” என்று பேசினார்.