96 இரண்டாம் பாகம்

96 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப் படுகிறது. இயக்குநர் பிரேம்குமார் திரைக்கதையை எழுதி முடித்துவிட்டதாகவும் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷாவின் கால்ஷீட்டிற்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இமேஜ் காரணத்தால் நடிக்க மறுத்தாரா பிரதீப் ?

இதனிடையில் 96 இரண்டாம் பாகத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஆர்வம் காட்டவில்லை இதனால்  பிரதீப் ரங்கநாதனை இயக்குநர் அனுகியதாகவும்,   தனது இமேஜ் பாதிக்கப்படும் என்பதால் அவர் இந்த படத்தில் நடிக்க மறுத்ததாகவும் சமூக வலைதளத்தில் தகவல் பரவி வருகிறது. இரு நடிகர்களும் மருத்துவிட்டதால் தற்போது இயக்குநர் புதிய நடிகரை தேடி வருவதாக இந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. 

கடுப்பான இயக்குநர் பிரேம் குமார் 

இந்த தகவல் பொய் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் இயக்குநர் பிரேம்குமார். இப்பாடியான போலி பதிவுகளை எதிர்கொள்வது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

" இது வழக்கம் போல் ஒரு தவறான செய்தி.'96 படத்தில் நடித்த நடிகர்களை வைத்து மட்டும்தான் '96-2 எடுக்க முடியும். நடிகர் திரு பிரதீப் ரங்கநாதன் அவர்களை நான் அணுகியது முற்றிலும் வேறு ஒரு கதைக்கு.அதற்கும் '96-2 படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.நாளுக்கு நாள் பெருகி வரும் தீங்கு விளைவிக்கும் இந்த பொய் செய்திகளை கையாள்வது மிகவும் கடினமாக உள்ளது.இதன் மூலம் உண்மையை சொல்ல அறம் சார்ந்த அச்சு மற்றும் ஊடக நண்பர்களை மீண்டும் நாடுகிறேன்." என அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.