Kia EV9 2026: கியா நிறுவனத்தின் EV9 மின்சார கார் மாடலின் அப்டேட் செய்யப்பட்ட, பல ட்ரிம்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

கியா EV9 2026 எஸ்யுவி அறிமுகம்:

கியா நிறுவனத்தின் மூன்று வரிசை கொண்ட மின்சார எஸ்யுவி ஆன, EV9 அப்டேடர் வெர்ஷன் தொடர்பான பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட E-GMP பிளாட்ஃபார்மில் தான் இந்த காரும் உருவாக்கப்பட்டுள்ளது. 2025 மாடலில் உள்ள பல அம்சங்கள் அப்படியே தொடர்ந்தாலும், சில முக்கிய மற்றும் கவனம் ஈர்கக்கூடிய மாற்றங்கள் இதில் செய்யப்பட்டுள்ளன. அதோடு புதிய எடிஷனின் பல ட்ரிம்களின் விலையும் அதிரடியாக குறைத்துள்ளது. கியா நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் மாடலாக இந்த கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 

EV9 2026 நைட்ஃபால் எடிஷன்:

மிகப்பெரிய கூடுதல் அம்சமாக ஆல்-வீல் ட்ரைவ் அம்சம் கொண்ட லேண்ட் வேரியண்ட்களுக்கு மட்டும், நைட்ஃபால் எடிஷன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தீவிர கருப்புநிற ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு இணையாக 20 இன்ச்சில் குளோஸ் பிளாக் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் தனித்துவமான உட்புற மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டுளன. பிளாக் பேட்ஜிங், தனித்துவமாக வெளிப்புறத்திற்கு புதிய ரோட்ரியர் பிரவுன் நிற ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதற்கென தனியாக சீட் ஸ்ட்ரிட்சிங்,  டிசைன் எலிமெண்ட்கள் மேற்கொள்ளப்பட்டு, 6 மற்றும் 7 இருக்கை ஆப்ஷன்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்பு இருந்த 4 வீல் ட்ரைவ் சிஸ்டம் நீக்கப்பட்டு டெர்ரெயின் மோட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  GT லைன் டிரிம்மில் உள்ள பூஸ்ட் மோட் புதிய நைட்ஃபால் எடிஷனிலும் தொடர்கிறது. மணிக்கு 96 கிலோமீட்டர் என்ற வேகத்தை வெறும் 4.5 விநாடிகளில் எட்டிவிடும் என கூறப்படுகிறது. 

இதர அப்டேட்கள்:

நைட்ஃபால் இணைப்பை தாண்டி ஜிடி லைன் வேரியண்டிற்கு டபுள்-டோன் பெயிண்ட் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. கிளாசியல் ஒயிட் மற்றும் வுல்ஃப் கிரே வண்ணங்களை பயனர்கள் தேர்வு செய்யலாம். முழுமையான உட்புற திருத்தங்கள் தொடர்பான விவரங்கள், சந்தைப்படுத்தலின்போது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

EV9 2026, 5 வேரியண்ட்கள் - ரேஞ்ச் நீட்டிப்பு:

கியா நிறுவனத்தின் EV9 மின்சார கார் மாடல் தொடர்ந்து 5 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. அதில், லைட் ஸ்டேண்டர்ட் ரேஞ்ச், லைட் லாங் ரேஞ்ச், விண்ட், லேண்ட் மற்றும் GT லைன் ஆகிய ட்ரிம்கள் அடங்கும். இதில் லைட் லாங் ரேஞ்ச் வழங்கி வந்த 455 கிலோ மீட்டர் என்ற ரேஞ்ச், தற்போது 491 கிலோ மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. EV9 தொடர்ந்து இரண்டு பேட்டரி ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது. அதன்படி, 76.1 kWh மற்றும் 99.8 kWhs என இரண்டு பேட்டரி ஆப்ஷன்கல் தொடர்கின்றன. ட்ரிம்களை பொறுத்து ஆற்றல் வெளியீடு 201 hp, 215 hp அல்லது 379 hp என மதிப்பிடப்படுகின்றன. விண்ட் மற்றும் லேண்ட் எடிஷன்களின் ரேஞ்சும் கணிசமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

EV9 2026 விலை குறைப்பு:

அப்டேட் செய்யப்பட்ட எடிஷனின் விலை விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, லைட் SR வேரியண்ட் விலை $54,900 (ரூ. 46.9 லட்சம்), லைட் லாங் ரேஞ்ச் வேரியண்ட் விலை $57,900 (ரூ. 49.4 லட்சம்), விண்ட் வேரியண்ட் விலை $63,900 (ரூ. 54.5 லட்சம்), லேண்ட் வேரியண்ட் விலை $68,900 (ரூ. 58.8 லட்சம்), மற்றும் GT-Line வேரியண்ட் விலை $71,900 (ரூ. 61.3 லட்சம்) என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப எடிஷனின் விலை ஏற்கனவே இருந்ததை போன்று தொடர்கிறது, ஆனால் லைட் லாங் ரேஞ்ச், லேண்ட் மற்றும் EV9 GT-லைன் ஆகியவை $2,000 வரை குறைக்கப்பட்டுள்ளன.

EV9 2026 விலை ஒப்பீடு

கியா EV9 வேரியண்ட் 2024 விலை (டாலரில்) 2025 விலை (டாலரில்) 2026 விலை (டாலரில்)
லை ஸ்டேண்டர்ட் ரேஞ்ச் 54,900 54,900 54,900
லைட் லாங் ரேஞ்ச் 59,200 59,900 57,900
விண்ட் 63,900 63,900 63,900
லேண்ட் 69,900 69,900 68,900
GT-லைன் 73,900 73,900 71,900

Car loan Information:

Calculate Car Loan EMI