தவெக மாநாட்டில் விஜய் உரை


விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்  மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடந்து முடிந்தது. இந்த மாநாட்டில் உரையாற்றிய விஜய் தனது கட்சியின் கொள்கைகளை தொண்டர்களுக்கு எடுத்துரைத்தார். மதச்சார்பற்ற சமூக நீதி அரசியலை முன்னேடுக்க இருப்பதாகவும் பிளவுவாத அரசியல் பேசுபவர்களும் ஊழல் அரசியலுமே தங்கள் கட்சியின் எதிரி என்றார். தந்தை பெரியார் கட்சியின் கொள்கைத் தலைவராக பின்பற்றப்படுவார். ஆனால் பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கைகளுடன் தாங்கள் உடன்படவில்லை என கூறினார். எல்லாவற்றுக்கும் முக்கியமாக திராவிட மாடல் ஆட்சி என்கிற பெயரில் மக்களை ஏமாற்றுபவர்களை எதிர்த்து தான் இந்த அரசியல் களத்தில் இறங்கியுள்ளார் என்பதை வெளிப்ப்டையாகவே தெரிவித்துள்ளார். வெளிப்படையாக கட்சிகளின் பெயரை குறிப்பிடாததற்கு காரணம் பயமில்லை வெறுப்பு அரசியல் செய்ய வேண்டும் என்பது தனது நோக்கமில்லை என கூறி விஜய் தனது உரையை முடித்தார்.


பா ரஞ்சித் ஆதரவு


தவெக மாநாட்டில் விஜயின் உரை தமிழக அரசியல் களத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் பேசிய ஒவ்வொரு கருத்துக்கும் சமூக வலைதளத்தில் பாசிட்டிவாகவும் நெகட்டிவாகவும் விவாதங்கள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் திரைப்பட இயக்குநர் பா ரஞ்சித் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் “ என்கிற புவியியல் அமைப்பின் அடிப்படையான தத்துவத்தை தாங்கி தன் முதல் அரசியல் கன்னி பேச்சை முடித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் திரு. விஜய் அண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! “ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு “ மற்றும் சாதி மத வர்க பிரிவினை வாதத்திற்க்கும் ஊழலுக்கும் எதிராக செயல்படப்போவதாக அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்"


என ரஞ்சித் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் “ என்கிற வரி ஒட்டுமொத்த மானுட சமுதாயத்திற்கே பொருந்து ஒரு வரியை விஜய் தனது கட்சிக் கொள்கையின் தாரகை மந்திரமாக தேர்ந்தெடுத்துள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.