பட விழாவில் ரஜினி பேசியது குறித்து நடிகர் விஜய் தன்னிடம் பகிர்ந்து கொண்ட கருத்தை இயக்குநர் பி.வாசு நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


கடந்த 2005 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ‘சந்திரமுகி’ .இந்த படம் தான்  தமிழ் சினிமா வரலாற்றில் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமையை தன்னகத்தே கொண்டுள்ளது.இன்றும் டிவியில் ஒளிபரப்பினார் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் சந்திரமுகி  படத்தின் 2ஆம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் பெரும் பொருட்செலவில் இந்த படத்தை தயாரித்துள்ளது. 


ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், ராதிகா, லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் என பலரும் நடித்துள்ள சந்திரமுகி 2 படத்திற்கு ’ஆஸ்கர் புகழ்’ மரகதமணி இசையமைத்துள்ளார். இப்படம் செப்டம்பர் 19 ஆம் தேதி திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாத காலமே ரிலீசுக்கு உள்ள நிலையில், அடுத்தடுத்து படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. 


இதனிடையே ‘சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் கழுகு - காகம் கதையை ரஜினி சொன்னார். இது இணையத்தில் மிகப்பெரிய விவாதத்தை உண்டாக்கியது. இதனடிப்படையில் அந்த நேர்காணலில் இயக்குநர் வாசுவிடம், “சந்திரமுகி படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் பேசிய ரஜினி, ‘விழுந்தா எழுந்திருக்க தயங்குற யானை நான் கிடையாது, குதிரை. டக்குன்னு எழுந்திரிச்சி நிப்பேன்’ சொன்னது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.


அதற்கு, ‘இதுபற்றி நடிகர் விஜய்யே என்னிடம் ஆச்சரியப்பட்டு பேசியுள்ளார். ‘பாருங்க சார்.படமே ரிலீஸ் ஆகல. என்ன ஒரு தெளிவோட, நம்பிக்கையா ரஜினி சார் பேசுற விதத்தை பாருங்க’ என அவர் என்னிடம் கூறியுள்ளார். நான் ஜெயிலர் ஆடியோ விழாவில், அந்த படத்தின் வெற்றி தெரிந்து விட்டது.  ரஜினி முகத்தில் அப்படி ஒரு நம்பிக்கை. இப்பவும் அவர் படம் நடிச்சிட்டு இருக்கும்போது தூங்க மாட்டார். எப்போதும் பட நினைப்பு தான் ஓடிக் கொண்டிருக்கும். படம் பண்ணும்போது அந்த இயக்குநரோடு அவ்வளவு அன்பு செலுத்துவார். அதனை காதலர்களிடம் கூட பார்க்க முடியாது’ என வாசு தெரிவித்துள்ளார்.