இயக்குநர் மிஷ்கினின் பழைய வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 


தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மிஷ்கின் தொடர்ந்து அஞ்சாதே, யுத்தம் செய், நந்தலாலா, முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட படங்களை இயக்கி கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவராக உள்ளார். நந்தலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என தனது படங்களில் நடித்து வந்த அவர், அதன்பிறகு சவரக்கத்தி, சூப்பர் டீலக்ஸ், பேச்சுலர் போன்ற நடித்து வரும் மிஷ்கின் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். 


அதேசமயம் நடிகை ஆண்ட்ரியாவை வைத்து பிசாசு-2 படத்தை இயக்கி வரும் அவர், முதல் பாகத்திற்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளதால் படம் குறித்த எதிர்பார்ப்பு பெரிதும் நிலவி வருகிறது. இந்நிலையில் மிஷ்கின் பேசிய வீடியோ ஒன்றை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். அஞ்சாதே படம் ரிலீசான நேரத்தில் அப்படத்தின் இயக்குநரான மிஷ்கினும், நடிகர் பாண்டியராஜனும் விஜய் டிவியில் ஒளிபரப்பான காஃபி வித் டிடி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 






அப்போது நிகழ்ச்சியின் தொகுப்பாளரான டிடி நான் சில நபர்களின் பெயரை சொல்கிறேன். உங்களுக்கு என்ன நியாபகம் வருகிறது என சொல்லுங்கள் என மிஷ்கினிடம் கேட்கிறார். முதலில் சூப்பர் ஸ்டார் பெயரை சொன்னதும் முள்ளும் மலரும் எனவும், அஜித் பெயரை சொன்னதும் பெரிய மனதுக்காரர் என்றும், தனுஷ் பெயரை சொன்னதும் நந்தலாலா படத்தின் கதையை சொன்னதும் நல்லா கதை சொல்றீங்க நீங்களே நடிக்கலாம் என சொல்கிறார். அடுத்ததாக த்ரிஷா, சிவகார்த்திகேயன் பெயரை சொன்னதும் “தெரியாது” என பதிலளிக்கிறார். இதனைப் பார்த்த பலரும் சிவகார்த்திகேயனை ஒரு காலத்தில் தெரியாது என சொன்னவரின் படத்திலேயே மிஷ்கின் நடிக்கவுள்ளார் என  விமர்சித்து வருகின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண