முன்னாள் டிக்டாக் பிரபலம், இந்நாள் சோஷியல் மீடியா ‛ஃப்ராப்லம்’ திருச்சி சாதனா, இரு நாட்களுக்கு முன் , தன் கணவரிடம் ‛கியா’ கார் வாங்கித் தர கோரிக்கை வைத்தார். அதற்கு மறுத்து அவரது கணவர், அவரை சாடியதும், இந்திய சாலைகளை வலம் வந்த ஒரு காரை தான்வாங்கப் போவதாகவும், அதுவரை பொறுக்குமாறு கூறியிருந்தார். 




யூடியூப் பிரபலங்கள் எல்லாம் அடுத்தடுத்து கார் வாங்குவதால், தானும் கார் வாங்க வேண்டும் என்று சாதனா கெஞ்சி கூத்தாடிய நிலையில், இரு நாட்களில், அவருக்கு சஸ்பென்ஸ் கொடுத்திருக்கிறார் அவரது கணவர். காரோடு வந்து கொண்டிருப்பதாக மனைவி சாதனாவுக்கு தகவல் கொடுக்க, வீட்டு முன் நின்று, காரை வரவேற்க தயாரானார் சாதனா. 



கார் வந்தது தான் தாமதம், உடனே ஓடிச் சென்று பார்த்தவருக்கு ஒரே அதிர்ச்சி. கியா கார் வரும் என எதிர்பார்த்தவருக்கு, வந்ததோ பழைய அம்பாசிடர் கார். அதுவும் ஒரு மாதிரி, கடகடத்துப் போன பழைய கார். காரை பார்த்து கடுப்பான அவர், உள்ளே இருந்த வீட்டுக்காரரை பார்த்து ‛என்னங்க இந்த டப்பா காரை வாங்கிட்டு வந்துருக்கீங்க...’ என கேட்க, ‛ஏய்... அப்துல்கலாமே இந்த கார்ல தான் போனார்... இதை போய் டப்பா கார்னு சொல்ற’ என அவரிடம் பெரிய விளக்கம் கொடுக்க, ‛என்னங்க... நான் ஒரு கார் கேட்டா... நீங்க ஒரு கார் வாங்கிட்டு வந்திருக்கீங்க...’ என சாதனா கூற, ஒரு வழியாக அவரை சமாளித்து, சம்மதிக்க வைத்து, காரில் அமர வைத்தார் சாதனாவின் கணவர்.


‛வேறு என்ன செய்வது...’ என, அதில் ஏறிக் கொண்ட சாதனா, ‛எம் மாமாவோட காரில், ஒரு ரவுண்ட் போறேன் நண்பர்களே..’ என, புறப்பட்டார். பண்ணையாரும் பத்மினியும் படத்தில் வருவதைப் போல், ‛ஆம்பாசிடர் காரும் வீட்டுகாருமாய்’ சந்தோஷமாய் புறப்பட்டது சாதனா தம்பதி. 



செலிபிரிட்டிகள் பலரும் புத்தம் புதிய கார்களை வாங்கி சமூக வலைதளத்தில் அதை பகிர்ந்து வந்த நிலையில், சாதனாவின் கணவர் தன்னால் முடிந்த காரை வாங்கியிருப்பது உண்மையில் பாராட்டக் கூடியாது தான். அதே நேரத்தில் விரைவில் சாதனாவின் ஆசையை நிறைவேற்றுவேன் என அவர் கூறியிருப்பதும், ஆரோக்கியமான கோரிக்கை தான். 


இனி சாதனாவை காரும் கையுமாக தான் பார்க்க முடியும். இனி எல்லா ஊருக்கும் காரில் புறப்பட்டு, புது புது வீடியோக்களை அள்ளித்தட்டப் போகிறார் சாதனா!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண