தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படம் குறித்து இயக்குநர் வெளியிட்ட தகவல் ஒன்றை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் 4வது முறையாக அவருடன் இணைந்துள்ள படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தை தனுஷின் படிக்காதவன், மாப்பிள்ளை படங்களை தொடர்ந்து 3வது முறையாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகைகள் நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷிகண்ணா, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.
கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் - அனிருத் கூட்டணி இணைந்துள்ளதால் திருச்சிற்றம்பலம் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் படமானது ஆகஸ்ட் 18 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுஷ் தாய் கிழவி,மேகம் கருக்காதா பெண்ணே, தேன்மொழி ஆகிய 3 பாடல்களை எழுதியுள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினரோடு இயக்குநர்கள் வெற்றிமாறன், செல்வராகவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர் திருச்சிற்றம்பலம் படத்தை பார்க்க தியேட்டருக்கு பேமிலி ஆடியன்ஸ் வருவார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தின் கதையை எழுதியது தனுஷ் தான் என்றும், அவருக்கு நான் படம் எடுத்த இயக்குநர் என்பதை கடந்து தனுஷ் எனக்கு நல்ல நண்பர். அவர் நடித்த பல படங்களுக்கு நான் கதை டிஸ்கஷன் தொடங்கி புரொடக்ஷன் வரை வேலை பார்த்துள்ளேன். அதன் ஒரு பகுதியாக நடந்தது தான் யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்கள் உருவானது. பேஸிக்காக தனுஷூக்கு ஸ்கிரிப்ட் நாலெட்ஜ் உண்டு. அவருடன் பழகும் அனைவரும் இதனை உணர்ந்திருப்பார்கள். அந்த வகையில் தனுஷ் எழுதியிருக்கும் அட்டகாசமான கதை திருச்சிற்றம்பலம். நிச்சயம் இந்த படம் குடும்பங்களை கொண்டாட வைக்கும் என மித்ரன் ஆர்.ஜவஹர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்