தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களை வழங்கியவர் இயக்குநர் மிஷ்கின். மிஷ்கினின் படங்கள் மட்டுமில்லாமல் சினிமா நிகழ்ச்சிகளில் இவர் பேசக்கூடிய கருத்துக்களுக்கு பெரிய ஃபாலோவர்ஸே இருந்து வருகிறார்கள். தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள ட்ரெயின் படத்தை இயக்கியுள்ள மிஷ்கின் அந்த படத்தின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது .

Continues below advertisement

 இந்த வீடியோவில் அவர் "என்னுடைய படங்களை கச்சிதமாக கட் செய்ய விரும்புவேன். அதனாலேயே எனக்கும் சண்டை வரும். இயக்குநர் மார்டின் ஸ்கார்ஸெஸியின்  எடிட்டர் தெல்மா 'மார்டி நீ வெளியே போ' என்று சொல்லிவிடுவாராம். ஆனால் நான் அதற்கு நேர் எதிரானவன். என் எடிட்டருடன் உட்கார்ந்து அவரை டார்ச்சர் செய்வேன். பெரும்பாலும் புதிய எடிட்டர்களை வைத்துதான் வேலை செய்வேன். லெலின் மாதியான ஆட்களிடம் போகமாட்டேன். அவர் என்னை வெளியே போக சொல்லிவிடுவார். இப்போதெல்லாம் 3 மணி நேரம் படம் பார்க்க யாரும் தயாராக இல்லை. ட்ரெயின் படத்தை முதலில் 2 மண் நேரம் 50 நிமிடத்திற்கு கட் செய்திருந்தேன். தானு சார் படத்தின் நீளத்தை குறைத்து தரசொன்னார். 2:40 க்கு கட் செய்தேன். என் உதவி இயக்குநர்கள் என்னுடன் சண்டைக்கு வந்தார்கள். தானு சார் இன்னும் குறைக்க சொன்னார். உதவி இயக்குநர் சட்டையை பிடித்துவிட்டார். வைரத்தை இன்னும் தீட்டுவோம் என்று அவர்களை சமாதானப்படுத்தினேன். கடைசியாக 2:30 நிமிடத்திற்கு படத்தை கட் செய்துகொடுத்தேன்" என்று மிஸ்கின் கூறியுள்ளார். 

வி.கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக  உருவாகியிருக்கிறது ட்ரெயின். மிஸ்கின் இப்படத்தை இயக்கி படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன், நாசர், நரேன், சம்பத் ராஜ், யுகி சேது ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர்.

Continues below advertisement