தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிறைய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

அதன்படி அரியவகை கனிம வளத் திட்டம், அதிவேக ரயில் வசதி, சுற்றுலா வசதிகள் உள்ளிட்ட அறிவிப்புகள், தமிழ்நாட்டுக்கு எனப் பிரத்யேகமாக வெளியாகி உள்ளன.  

1. தமிழ்நாட்டுக்கு அரியவகை கனிம வளத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரிய கனிமவள நிரந்தர காந்த உதிரிபாகங்களுக்கான திட்டம், கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் கனிம வளங்கள் மிகுந்த தமிழ்நாடு, ஒடிசா, கேரளா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களில் தொடங்கத் திட்டம்.

இதன் மூலம் அரிய வகை கனிம வளங்கள் காரிடர்களை அமைத்து,  கனிம வளங்களை வெட்டி எடுக்கவும், அதை மேம்படுத்தவும், ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

2. சென்னையில் இருந்து அதிவேக ரயில் வசதி

ஹைதராபாத் டூ சென்னை, சென்னை டூ பெங்களூருவிற்கு அதிவேக ரயில் வழித்தடம் அமைக்கப்படும் , மொத்தமாக 7 அதிவேக ரயில் வழித்தடம் உருவாக்கப்படும்

3. பொதிகை மலையில் சுற்றுலா, மலையேற்ற வசதிகள் உருவாக்கப்படும்.

4. பழவேற்காடு ஏரி பகுதியில் பறவைகளைக் காண்பதற்கான, பிரத்யேக காட்சி மையம் அமைக்கப்படும்.

5. ஆதிச்சநல்லூரில் அகழாய்வை மக்கள் பார்வையிடும் வகையில், கலச்சார மையம் அமைக்கப்படும்.

6. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தென்னை மற்றும் முந்திரி உற்பத்தியை அதிகரிக்க தனித் திட்டம் ஏற்படுத்தப்படும்.