ஆயிரத்தில் ஒருவன்


செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். கார்த்தி , ஆண்டிரியா , ரீமா சென் , பார்த்திபன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். தஞ்சையில் இருந்து புலம்பெயர்ந்து போன சோழர்களைத் தேடிச் செல்கிறார்கள் ஒரு குழுவினர். சோழர்களை சென்றடையும் வழியில் அவர் சந்திக்கும் சவால்களை தனது கற்பனைகளால் சுவாரஸ்யப் படுத்தியிருப்பார் செல்வராகவன். அட்வென்ச்சர்  ஃபேண்டஸி படமாக உருவான இப்படம் வெளியான சமயத்தில் பெரியளவில் கவனிக்கப்படவில்லை. மேலும் வசூல் ரீதியாக இப்படம் பெரிய தோல்வியை சந்தித்தது. 


பின் அடுத்தடுத்த தலைமுறை ரசிகர்களை சென்றடைந்து  இப்படத்தைக் கொண்டாடி வருகிறார்கள். ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் அதில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் இயக்குநர் செல்வராகவன் சில ஆண்டுகள் முன்பாக போஸ்டர் வெளியிட்டிருந்தார். ஆனால் இந்த படத்தை தயாரிக்கு பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் முன்வரவில்லை. தொடர்ந்து படம் குறித்த எந்த தகவலும் வெளி வரவில்லை


தயாரிப்பு நிறுவனங்களை சாடிய மோகன் ஜி


தற்போது இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் பக்கத்தில் ”கண்ட கண்ட கதையை எல்லாம் படமாக்கும் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து வெளியிடுங்கள்.. இன்னும் இந்த படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு புரியாமல் நீங்க எல்லாம் என்ன தயாரிப்பு நிறுவனமோ..” என்று பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். 






திரெளபதி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மோகன் ஜி தொடர்ந்து ருத்ரதாண்டவம் மற்றும் பகாசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவரது பகாசூரன் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத் தக்கது.




மேலும் படிக்க : Siddharth 40 : சித்தார்த்தின் 40-வது படத்தின் பூஜை...படத்தில் நடிக்கும் பிரபலங்கள் யார் தெரியுமா?


R Parthiepan : முதல் நாள் கூட்டமேயில்லை.. மறுநாள் டிக்கட்டே இல்லை.. பார்த்திபன் ஹேப்பி அண்ணாச்சி