விஜய்யுடன் படம் பண்ணுவதே சந்தோஷம் தான் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


லியோ கூட்டணி 


லியோ படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - நடிகர் விஜய் கூட்டணி 2வது முறையாக இணைந்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் லியோ படத்தில் ஹீரோயினாக த்ரிஷாவும், முக்கிய கேரக்டரில்  ப்ரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன் நடிக்கின்றனர். அதேபோல் அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, ஜார்ஜ் மரியன், இயக்குநர்கள் கௌதம் மேனன், மிஷ்கின் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். 


லியோ படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகிறது. இதனிடையே இந்த படத்தில் இருந்து முதல் பாடலாக ‘நா ரெடி’ பாடல் விஜய் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில், விஜய்க்கும் தானும் லியோ படத்தில் இணைந்தது பற்றி பேசியுள்ளார். 


விஜய்யுடன் படம் பண்ணுவதே சந்தோஷம்


மாஸ்டர் முடிக்கும் போதே எனக்கு தெரியும் நாங்கள் திரும்ப இணையப் போகிறோம் என்பது தெரியும். ஆனால் அது எப்போது என தெரியாமல் இருந்தது. நான் விக்ரம் பண்ணும்போது, அவர் பீஸ்ட், வாரிசு படங்கள் பண்ணினார்.விஜய்யுடன் படம் பண்ணுவதே சந்தோஷம் தான். எந்த சீன் ஆக இருந்தாலும் 24 மணி நேரம் ஷூட்டிங் ஸ்பாட் செம ஜாலியாக இருக்கும். அவரோட போர்ஷன் இன்னும் 10 நாட்களில் முடிவடைந்து விடும்.


விஜய்யை மிஸ் பண்ணுவோம் என நினைக்கும்போது கஷ்டமா தான் இருக்குது. கிட்டதட்ட ஒரு வருஷம் லியோ படத்துக்காக இணைந்து பயணம் செய்துள்ளோம். விஜய்யுடன் எத்தனை படம் வேண்டுமானாலும் பண்ணலாம். எல்லா நடிகர்களுடன் எனக்கு ஒரு பிணைப்பு இருக்கும். சார் என்று தான் அழைப்பேன். மாஸ்டர் படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்த பின் இவரை அண்ணா என அழைக்க ஆரம்பித்து விட்டேன்.


ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் 


நான் மட்டுமல்ல செட்டுல இருக்க எல்லோரும் அப்படித்தான் கூப்பிடுவாங்க. அதுக்கான இடத்தை விஜய் கொடுத்துள்ளார். நாம காலையில போய் ஸ்பாட்டில் என்ன டென்ஷனில் இருந்தாலும் அவர் வந்ததும் நேராக எல்லாத்துக்கும் வணக்கம் சொல்லுவார். இதை நாம செய்ய வேண்டுமென நினைத்தாலும் அடுத்த நாள் செய்ய மறந்துருவோம். 8.30, 9 மணிக்கு ஷூட்டிங் என்றால் 7 மணிக்கே வந்து விடுவார். 7.05, 7.10க்கு எல்லாம் வரமாட்டார். நான் 7.30 அல்லது 8 மணி அல்லது லேட்டா கூட வருவேன். அந்த மாதிரி தகுதி இருப்பது எப்படி சாத்தியம் என அவரிடமே கேட்பேன்.