Thalaivar 171: ரஜினி நடிக்க உள்ள தலைவர் 171 படத்தில் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச்சில் தொடங்கும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். 


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் கடந்த 19ம் தேதி திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கிறது. படத்திற்கு கலவையான விமர்சனம் இருந்தாலும் தொடர் விடுமுறையால் பாக்ஸ் ஆபிசில் லியோ படம் கலெக்‌ஷனை அள்ளி வருகிறது. லியோ படத்தின் ரிலீஸை தொடர்ந்து அடுத்த படத்திற்கான பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுள்ளார்.


ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினி தலைவர் 170 மற்றும் 171 படங்களில் நடிக்க ஒப்புதல் அளித்துள்ளார். த.செ. ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இதில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், மஞ்சுவாரியர் என பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளனர். படப்பிடிப்புகள் கேரள, தமிழ்நாட்டில் நடந்து வரும் நிலையில், ரஜினியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 


இதற்கிடையே தலைவர் 171 படத்தின் அப்டேட்களும் வெளியாகி வருகின்றன. தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள நிலையில் பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில், ரஜினி நடிக்கும் தலைவர் 171 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரலில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லியோ வசூல் எவ்வளவு வந்துள்ளது என தெரியவில்லை என்றாலும், இனிமேல் தான் அது குறித்து படத்தின் தயாரிப்பாளரிடம் லலித்குமாரிடம் பேச வேண்டும் என்றார். 


லியோ படத்துக்கு வரும் எதிர்மறை விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், படம் மக்களுக்கு பிடித்திருந்தால் சந்தோஷம் என்றும், தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் என்ன விமர்சனங்கள் முன் வைத்தாலும் அதை ஏற்று கொண்டு அடுத்த படத்திற்கு தயாராவேன் என கூறியுள்ளார். 


முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தலைவர் 171 படத்தில் ஃபகத் பாசில் வில்லனாக நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால், ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் தலைவர் 170 படத்திலும் ஃபகத் ஃபாசில் நடிப்பதால், தலைவர் 171 படத்தில் வேறொரு ஹீரோவை வில்லனாக போட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, சலார் படத்தில் வில்லனாக நடித்துள்ள பிருத்விராஜ் ரஜினியின் தலைவர் 171 படத்தில் வில்லனாக நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு ரஜினி தரப்பில் கிரீன் சிக்னல் காட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 


மேலும் படிக்க: அம்மாவுக்காக சென்னையில் தற்காலிகமாக குடியேறும் பாலிவுட் நடிகர் அமீர்கான் - காரணம் இதுதான்!


LCU Timeline: லோகேஷ் கனகராஜின் LCU டைம்லைன்; கதை எங்கு, யாரிடம் தொடங்குகிறது? எப்படி இணைக்கப்பட்டுள்ளது?