நடிகை த்ரிஷா பற்றி ஆபாசமாக பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்ட பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 


செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்து கடந்த அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி லியோ படம் வெளியானது. இதில் விஜய், த்ரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, மாயா கிருஷ்ணா, வையாபுரி, அனுராக் காஷ்யப், இயக்குநர் ராமகிருஷ்ணன், மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலிகான், இயக்குநர்  மிஷ்கின், அர்ஜூன், பிக்பாஸ் ஜனனி, சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். 






இப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், ‘ லியோ படத்தில் த்ரிஷாவுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் இப்படத்தில் அவர் அருகில் கூட என்னால் செல்ல முடியவில்லை. அட்லீஸ்ட் மடோனா பாப்பா கிட்டயேவாது போகணும்னு நினைச்சேன். ஆனால் அதுவும் நடக்கவில்லை’ என தெரிவித்திருந்தார். அவரின் இந்த பேச்சை அனைவருமே சாதாரணமாக கடந்து சென்ற நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்துகள் கடும் சர்ச்சையை கிளப்பியது.


அதாவது, “வில்லனையே பாலியல் வன்முறை செய்ய விட மாட்டேன் என்கிறார்கள். எனக்கும் ரொம்ப ஆசையாக இருந்தது. த்ரிஷாவுடன் நடிக்கப்போகிறோம் என்பதால் பெட்ரூம் சீன் எல்லாம் இருக்கும் என நினைத்தேன். 150 படத்தில் நான் பார்க்காத பாலியல் வன்கொடுமை சீனா. ஆனால் த்ரிஷாவை கண்ணிலேயே காட்டவில்லை"  என ஆபாசமாக கருத்து தெரிவித்தார். மன்சூர் அலிகானின் இந்தப் பேச்சு இணையத்தில் கடும் எதிர்ப்புகளை பெற்றது. 


இதுதொடர்பாக நேற்று எக்ஸ் தளத்தில் நடிகை த்ரிஷா பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “திரு.மன்சூர் அலிகான் என்னைப் பற்றி சமீபத்தில் அருவெறுக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ ஒன்று என் கவனத்துக்கு வந்தது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது அவமரியாதையான, பெண் வெறுப்புமிக்க, பாலியல் அத்துமீறல் பேச்சாகும். அவர் இதற்கெல்லாம் ஆசைப்படலாம். ஆனால் இவ்வளவு மோசமான ஒருவருடன் திரையைப் பகிர்ந்து கொள்ளாததற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். என் திரை வாழ்க்கை முழுவதும் இது ஒருபோதும் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன். இது மாதிரியான நபர்கள் தான் மனித குலத்திற்கே கெட்டப் பெயரை ஏற்படுத்துகிறார்கள்” என தெரிவித்திருந்தார். 






இந்நிலையில் த்ரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்து, நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சை கண்டித்தும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நாங்கள் அனைவரும் ஒரே அணியில் பணியாற்றி இருந்தாலும் திரு. மன்சூர் அலி கான் தெரிவித்துள்ள பெண் வெறுப்புக் கருத்துக்களைக் கேட்டு கோபமடைந்துள்ளோம். எந்த துறையிலும் பெண்களுக்கான மரியாதை பேச்சுவார்த்தைக்குட்படாத ஒன்றாக இருக்க வேண்டும். அவரின் இந்த செயலை நான் முற்றிலும் கண்டிக்கிறேன்” என தெரிவித்துள்ளார். 






இதேபோல் நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள பதிவில், “இது அருவருப்பான ஒன்று. இந்த ஆண் (மன்சூர் அலிகான்) பெண்களை இப்படித்தான் பார்க்கிறான் , அவர்களைப் பற்றி சிந்திக்கிறான் என்பது வெட்கக்கேடானது. ஆனால் பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் இதைப் பற்றி வெளிப்படையாகவும் பேசுவதற்குத் துணிவு(!!) இருக்கிறதா? இது அவமானம். நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட கேவலம் “ என சரமாரியாக விமர்சித்துள்ளார். 


தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது பதிவில், “திரு.மன்சூர் அலி கானின் இந்த நடத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் நான் இதை கடுமையாக கண்டிக்கிறேன். நான் த்ரிஷாவுக்கு ஆதரவாக நிற்பதோடு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கிறேன்.