Karthik Subbaraj : தலைவர் குறி வச்சா தப்பாது.. வேட்டையன் பார்க்கவந்த கொலவெறி ரஜினி ரசிகன் கார்த்திக் சுப்பராஜ்

ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் திரையரங்கில் பார்க்க சென்றுள்ளார்

Continues below advertisement

வேட்டையன்

ரஜினியின் வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஜெயிலர் படத்தைப் போலவே இந்த ஆண்டும் ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்டமான படமாக வேட்டையன் அமைந்துள்ளது. எதிர்பார்த்த அளவு படத்திற்கு முதல் நாள் கூட்டம் இல்லை என்றாலும் அடுத்தடுத்த நாட்களில் படத்திற்கு கூட்டமும் வசூலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Continues below advertisement

குறிப்பாக பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில் வசூலில் விஜயின் தி கோட் படத்தின் வசூலை வேட்டையன் படம் முந்துமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. 

வேட்டையன் பார்க்கச்சென்ற கார்த்திக் சுப்பராஜ்

ஒரு பக்கம் ரஜினி ரசிகர்கள் திரையரங்கத்தை நோக்கி படையெடுத்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் பிரபலங்களும் வேட்டையன் படம் பார்க்க திரையரங்குகள் சென்றுள்ளார்கள். முன்னதாக தனுஷ் , ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் அவரது இரு மகள்கள் திரையரங்கு சென்றார்கள். தற்போது ரஜினியின் தீவிர ரசிகரான இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வேட்டையன் படம் பார்க்க சென்னை கமலா திரையரங்கம் சென்றுள்ளார். அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் ”தலைவர் படம் என்பதால் நிச்சயமாக நான் ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன்" என்றார்.

மேலும் ரஜினி நடித்த படங்களில் பேட்ட படம்தான் உண்மையான Fanboy சம்பவம் என்கிற கருத்து பற்றி அவரிடம் கேள்வி எழுப்பியபோது "பேட்ட படத்திற்கு பின் நிறைய நல்ல படங்கள் வந்திருக்கின்றன. ஜெயிலர் சூப்பராக இருந்தது. தலைவர் குறி வச்சா தப்பாது" என்று கூறினார். 

ALSO READ | Vettaiyan Review: சூப்பர் ஸ்டாரின் வேட்டையன்.. ரஜினி ரசிகர்களுக்கு வேட்டையா? விரிவான விமர்சனம் இதோ

Continues below advertisement
Sponsored Links by Taboola