இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வழங்கும், அசோக் வீரப்பன் இயக்கத்தில் கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம், ஜெயராமன் தயாரிப்பில் வைபவ்-அனகா நடித்துள்ள ஆக்ஷன் த்ரில்லர் படம் 'பஃபூன்' நாளை வெளியாகிறது
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் வைபவ்-அனகா முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் 'பஃபூன்'. அதிரடி ஆக்சன் படமாக உருவாகியிருக்கும் இந்தப்படத்தை கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அசோக் வீரப்பன இயக்கி இருக்கிறார். இந்தப்படம் நாளை வெளியாக இருக்கிறது.
இந்தப்படம் பற்றி பேசிய அசோக் வீரப்பன் ‘இது முழுக்க முழுக்க ஆக்சன் படம். மேடை நாடகங்களில் வரும் பஃபூனின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் கூறுகையில், "ஒரு பஃபூன் வாழ்வில் என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் முக்கிய கரு. சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய கடலோர மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தலைப்பைப் பார்த்து இது ஒரு நகைச்சுவைப் படமாக இருக்கும் என்று நினைக்கலாம்.
ஆனால், 'பஃபூன்' ஒரு அதிரடி அரசியல் கதைக்களம் கொண்ட படமாக இருக்கும். இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, ராமேஸ்வரம், கொல்லம் மற்றும் சென்னையை சுற்றி நடந்தது. ஆந்தகுடி இளையராஜா முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் அனகா நாயகியாக நடிக்கிறார்.
50 வருட மேடை நாடக அனுபவம் கொண்ட மதுரை எம்.பி. விஸ்வநாதன் இப்படத்தில் வைபவின் அப்பாவாக நடிக்கிறார். பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுதவிர, ஆடுகளம் நரேன், தமிழரசன், மூணார் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை சிறப்பாக இருக்கும்.” என்று பேசினார்.