அஜித் நடிக்கும் துணிவு படத்தின் ஷூட்டிங் முடிந்தநிலையில், தற்போது படத்தின் டப்பிங் வேலையில் ஹெச்.வினோத் பிசியாக உள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் அஜித் 3வது முறையாக தயாரிப்பாளர் போனி கபூர் - இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் நடித்துள்ளார். ஏற்கனவே நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்கள் கலவையான விமர்சனத்தை சந்தித்த நிலையில் 3 வது படத்தை பெரும் எதிர்பார்ப்போடு ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அஜித்தின் 61வது படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு “துணிவு” எனப் பெயரிடப்பட்டது.
வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இதன் படப்பிடிப்பு ஹைதராபாத், பாங்காங், விசாகப்பட்டினம் தாய்லாந்து உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது. துணிவு திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் நாயகியாக பிரபல நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ள நிலையில் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
அண்மையில் இந்தப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான அமீர் - பாவ்னி மற்றும் சிபி சக்ரவர்த்தி இணைந்திருப்பதை அவர்கள் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் உறுதி செய்தது. இப்படத்தில் சமுத்திரக்கனி, பாலா சரவணன், யோகி பாபு, ஜான் விஜய், தர்ஷன், விஜய் முத்து, பிரேம் குமார், ராமசந்திரன், சங்கர், ஜி.எம். சுந்தர், சரவணன் சுப்பையா மற்றும் பலர் என ஒரு மிக பெரிய திரை பட்டாளம் இப்படத்தில் நடித்து வருகிறது.
தற்போது, ஹெச் வினோத் டப்பிங் ஸ்டுடியோவில் இருப்பது போன்ற பல புகைப்படங்கள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அவருடன் பல ரசிகர்கள் ஆர்வமாக போட்டோ எடுத்து வருகின்றனர். வாரிசு படத்தின் புத்தம் புதிய போட்டோக்கள் வெளியாகி வைரல் ஆனது. அந்த படத்திற்கு டஃப் கொடுக்கும் வகையில், துணிவு படத்தின் டப்பிங் வேலை சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.