பெண்களின் மார்பகத்தின் அமைப்பு சிக்கலானது, கொழுப்பு, சுரப்பி மற்றும் இணைப்பு திசு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஒருவரது வாழ்நாளில் பெண்களின் மார்பகங்கள் பல மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. மாதவிடாய் சுழற்சி, கர்ப்பம், பாலூட்டுதல் அல்லது வயது தொடர்பான மாற்றங்கள் போன்றவற்றில் பெரும்பாலானவை ஹார்மோன் மாற்றங்களாகும். பெண்கள் ப்ராக்களை அணிவதால் மார்பகங்கள் மற்றும் தோள்களுக்கு அது சப்போர்ட் வழங்குவதோடு, அது அவர்களுக்கான கம்ஃபர்ட் மற்றும் தோரணையை மேம்படுத்துகிறது.


பல்வேறு வகையான ப்ராக்கள் சந்தையில் கிடைக்கின்றன, பிரபலமான வகைகளில் ஸ்போர்ட்ஸ் ப்ராவும் ஒன்று. இவை பிரத்யேகமாக மார்பகத்தின் இயக்கத்தைக் கையாளவும், தோள்பட்டை மற்றும் முதுகில் உள்ள அழுத்தத்தைக் குறைப்பதோடு அதிகபட்ச சப்போர்ட் வழங்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஸ்போர்ட்ஸ் ப்ரா தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிறப்பு பொருட்கள் வியர்வையை உறிஞ்சி சருமத்தை உலர வைக்கும். ஸ்போர்ட்ஸ் ப்ரா விளையாட்டு அல்லது இதர உடல்சார்ந்த செயல்பாடுகளின் போது மட்டுமே பயன்படுத்தப்பட்டாலும், அதிக எண்ணிக்கையிலான பெண்கள், இது தரும் வசதியின் காரணமாக இதைத் தொடர்ந்து அணிவதைத் தேர்வு செய்கிறார்கள்.


கலிபோர்னியாவின் சுற்றுச்சூழல் சுகாதார மையம் (CEH) சமீபத்தில் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது, பல ஸ்போர்ட்ஸ் ப்ராக்கள் மற்றும் தடகள ஆடைகளில் பிஸ்பெனால் ஏ என்ற வேதிப்பொருள் அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 8 பிராண்டுகளின் ஸ்போர்ட்ஸ் ப்ராக்கள் மற்றும் 6 பிராண்டுகள் தடகள ஆடைகளுக்கு இதை அடுத்து சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சோதனையில், பிபிஏ இன் பாதுகாப்பான வரம்பை விட 22 மடங்கு வரை அதில் சேர்க்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.


பிபிஏ என்பது பிளாஸ்டிக் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ஒரு இரசாயனம். பிளாஸ்டிக் பாட்டில்கள், குடிநீர் கோப்பைகள், உணவு கேன்கள் போன்ற பல நுகர்வோர் பொருட்களில் காணப்படுகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை. இது உடலின் இயல்பான செயல்பாட்டை சீர்குலைக்கலாம். கர்ப்ப காலத்தில் குறைந்த அளவிலான வெளிப்பாடுகள் கூட பிற்கால வாழ்க்கையில் மார்பக அல்லது கருப்பை புற்றுநோயை உருவாக்கும். புரோஸ்டேட் சுரப்பியின் விளைவுகள், பாலூட்டி சுரப்பிகள் மற்றும் கருப்பைகளின் அசாதாரண வளர்ச்சி போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுடன் இது தொடர்புடையது. மூளை மற்றும் குழந்தையின் நடத்தையில் வேறுபட்ட உடல்நல பாதிப்புகள். கூடுதலாக, நீரிழிவு, புற்றுநோய், இதய நோய், இளம் பெண்களுக்கான ஆஸ்துமா, ஆண் மற்றும் பெண் கருவுறுதல் மற்றும் அகால மரணம் போன்ற பல்வேறு தீங்கு விளைவிக்கும் உடல்நல பாதிப்புகளுடன் பிபிஏ இணைக்கப்பட்டுள்ளது.




பிபிஏ தோலின் மூலம் உறிஞ்சப்பட்டு இரத்த ஓட்டத்தில் முடிவடையும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. குறிப்பாக ஸ்போர்ட்ஸ் ப்ராக்கள் மற்றும் தடகள ஆடைகள் ஒரே நேரத்தில் மணிக்கணக்கில் அணியப்படுவதால், அவற்றில் நீங்கள் வியர்வை சிந்த வேண்டும் என்பதால், ஆடைகளில் அதிக அளவு பிபிஏ இருப்பது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிபிஏ பல தயாரிப்புகளில் இருப்பதால், அதை முற்றிலும் தவிர்ப்பது மிகவும் கடினம். இருப்பினும், விழிப்புணர்வு என்பது முதல் படி மற்றும் பிளாஸ்டிக் அல்லாத டப்பாக்களில் உணவை உண்ணவும், குடிக்கவும் மற்றும் சேமிக்கவும் பிபிஏ இல்லாத தயாரிப்புகளைப் பயன்படுத்த முயற்சிப்பது நல்லது. ஆக்டிவ்வேர் ஆடைகளை நீண்டநேரம் அணிவதைக் கட்டுப்படுத்துவதும், வொர்க் அவுட்டிற்குப் பிறகு உடனடியாக மாற்றுவதும் இதற்கான சிறந்த வழி. அதேபோல், 100 சதவிகிதம் பருத்தி, கைத்தறி அல்லது கம்பளி போன்ற இயற்கை இழைகளைத் தேடுங்கள், மேலும் பாலியஸ்டர் மற்றும் ஸ்பான்டெக்ஸ் போன்ற செயற்கை இழைகளைத் தவிர்க்கவும்.