வெந்து தணிந்தது காடு படத்தின் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் கௌதம் மேனனை நிகழ்ச்சியின் நெறியாளர் கேள்வி கேட்டு குழப்பிய சம்பவம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. 


சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ள படம் “வெந்து தணிந்தது காடு”.. ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இட்னானி நடித்துள்ளார். இந்த படம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதியான தியேட்டர்களில் வெளியானது. எதிர்பார்த்தை போல படம் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளது. 7 நாட்கள் முடிவில் வெந்து தணிந்தது காடு சுமார் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.






இதனிடையே இதற்கான புரோமோஷன் பணிகளுக்காக இயக்குநர் கௌதம் மேனன் பல ஊடகங்களில் நேர்காணல் அளித்திருந்தார். அந்த வகையில் தெலுங்கில் ஒரு ஊடகம் ஒன்றில் நேர்காணல் அளித்தார். அப்போது அதன் நெறியாளர் கௌதம் மேனனிடம் படம் குறித்த கேள்விகளை கேட்டுக் கொண்டே வர, கௌதம் மேனனும் பதில் சொல்லி கொண்டிருந்தார். அப்போது நெறியாளர், மணிரத்னத்தின் ‘செக்க சிவந்த வானம்’ படத்தை குறிப்பிட்டு உங்களது முந்தைய படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் என நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும். இதனை கையாண்டது கடினமாக இருந்ததா என கௌதம் மேனனிடம் கேட்டார். 






கேள்வியை கண்டதும் ஒரு நிமிடம் கௌதம் அதிர்ச்சியடைந்தார். ஆனாலும் சிரித்துக் கொண்டே சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த் சுவாமி ஆகியோருடன் பணியாற்றுவது மிகவும் கடினமாக இருந்தது. அவர்களின் தேதிகளைப் பெறுவது உங்களுக்குத் தெரியும். அவர்கள் அனைவரும் மிகவும் பிஸியான நடிகர்கள். ஆனாl மணிரத்னம் ஆகிய நான் கூப்பிட்டால் எளிதாக வந்துவிடுவார்கள். நான் காலை 4:30-5 மணிக்கு ஷூட்டிங் ஆரம்பிக்கிறேன், அவர்கள் அனைவரும் இருப்பார்கள். காலை 7 மணிக்கு கௌதம் மேனன் படத்துக்கு சிம்பு வருவதில்லை என்று கேட்டால் மணி சார் எனக்காக காலை 4:30 மணிக்கே இருந்தார். இது ஒரு சிறந்த அனுபவம் என நக்கலாக தெரிவித்துள்ளார்.  இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.