"தங்க மகன்" தனுஷ் இன்றைய நன் நாளில் எல்லா வளங்களும் பெற்று சீருடன் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன் என்று இயக்குநர் பாராதிராஜா கூறியுள்ளார்.
நடிகர் தனுஷ் இன்று தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி, அவருக்கு ரசிர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சமூகவலைதளம் வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். அந்த வகையில், தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் பாரதிராஜா தனுஷ்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Dhanush 43 Maaran | வெளியானது தனுஷ் 43 ஃபர்ஸ்ட் லுக்! பேரு தெரியுமா? கெத்துகாட்டும் ரசிகர்கள்..!
அந்த அறிக்கையில், ‘திரையில் தோன்றும் ஒரு சில கதாபாத்திரங்கள் நம்மையும் அறியாமல் நமக்குள் ஊடுறவி நம் உணர்வோடு. உறவோடு பின்னப்பட்டாதாய் அமைந்துவிடும்.. ஆனால் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நபரின் உண்மையான குண நலன்கள் நிஜ வாழ்க்கையில் முற்றிலும் நேர்மாறாக இருப்பதை கண்டு நாம் அதிர்ச்சியில் உறைந்துவிடுவதுண்டு, நிஜ வாழ்க்கையில் எப்படியோ.. அதை திரையிலும் பிரதிபலிப்பவர்கள் ஒரு சிலரே... அதில் உன்னை நான் முதன்மையானவனாகப் பார்க்கிறேன். எளிமை, தன்னடக்கம், விருதுகள் வென்று குவித்தாலும் " நான்" என்கின்ற அகந்தை அற்ற பணிவு.. சிறந்த கலை தொழில் நுட்ப அறிவு இது போதும் டா.. இன்னும் நூறு உலக விருதுகள் உன் வீட்டு கதவைத் தட்டும். பேரன்புமிக்க "தங்க மகன்" தனுஷ் இன்றைய நன் நாளில் எல்லா வளங்களும் பெற்று சீருடன் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தனுஷின் 38 வது பிறந்தநாளை முன்னிட்டு, தனுஷ்43 படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் படக்குழு இன்று காலை வெளியிட்டது. இந்தப் படத்திற்கு 'மாறன்’ என பெயர் வைத்துள்ளனர். ’மாறன்’ டைட்டில் போஸ்டர் இணையத்தை கலக்கி வருகின்றன.
இது ஒரு புறம் இருக்க டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தனுஷின் பிறந்த நாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பிறந்த நாளில் அவருக்காக ரசிகர்கள் உருவாக்கியுள்ள பிரம்மாண்ட ஃபேன் மேட் போஸ்டர்கள் ரசிக்கும்படியாக உள்ளது. “கடின உழைப்புக்கு முன் உதாரணம் நீங்கதாண்ணா” என தனுஷ் கடந்து வந்த பாதை குறித்த க்ளிம்ஸ்கள் பலவற்றை பதிவிட்டு வருகின்றனர்.