Dhanush 43 Maaran | வெளியானது தனுஷ் 43 ஃபர்ஸ்ட் லுக்! பேரு தெரியுமா? கெத்துகாட்டும் ரசிகர்கள்..!
கார்த்திக் நரேன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று கூடுதலாகவே உள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ‘துருவங்கள் பதினாறு’ திரைப்படம் மூலமாக சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த இளம் இயக்குநர் கார்த்திக் நரேன். இவரது இயக்கத்தில் நடிப்பு அசுரன் ‘தனுஷ்’ நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘டி43’. கார்த்திக் நரேன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று கூடுதலாகவே உள்ளது. படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ‘மாளவிகா மோகன்’ நடித்து வருகிறார். இந்த படத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, மகேந்திரன், கிருஷ்ணகுமார் போன்ற முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் தனுஷ் 43 படத்தை தயாரித்து வருகிறது.இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.இந்நிலையில் இன்று படத்தின் நாயகன் தனுஷின் 38 வது பிறந்தநாளை முன்னிட்டு, தனுஷ்43 படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியிட இருப்பதாக முன்னதாக அறிவித்திருந்தது படக்குழு. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு தனுஷ் 43 படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்திற்கு 'மாறன்’ என பெயர் வைத்துள்ளனர்.தற்போது வெளியாகியுள்ள தனுஷின் 43 வது படமான ’மாறன்’ டைட்டில் போஸ்டர் இணையத்தை கலக்கி வருகின்றன.
’மாறன்’ படமானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் படத்தின் நாயகி மாளவிகாவுடன் கூடிய இறுதிக்கட்ட காட்சிகளை படமாக்கியுள்ளார் இயக்குநர். முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் படம் ஒடிடியில் வெளியானது. ஆனால் அது அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இந்நிலையில் படத்திலிருந்து இயக்குநர் கார்த்திக் நரேன் விலகிவிட்டதாகவும். ‘மாறன்’ படத்தை தனுஷே இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் தனுஷிடம் கார்த்திக் நரேன் சீன் குறித்து விளக்குவது போன்ற புகைப்படம் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு “ஐதராபாத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் “ என கேப்ஷன் கொடுத்திருந்தது.
அதன் பிறகு இயக்குநர் மாற்றம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இது ஒரு புறம் இருக்க டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தனுஷின் பிறந்த நாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பிறந்த நாளில் அவருக்காக ரசிகர்கள் உருவாக்கியுள்ள பிரம்மாண்ட ஃபேன் மேட் போஸ்டர்கள் ரசிக்கும்படியாக உள்ளது. “கடின உழைப்புக்கு முன் உதாரணம் நீங்கதாண்ணா” என தனுஷ் கடந்து வந்த பாதை குறித்த க்ளிம்ஸ்கள் பலவற்றை பதிவிட்டு வருகின்றனர்.தன்னம்பிக்கையும், விடா முயற்சியும், கடின உழைப்பிற்கு சான்றாக இருப்பவர் நடிகர் தனுஷ். கோலிவுட் மட்டுமல்லாது டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என தனது திறமையை அடுத்தடுத்த லெவலுக்கு அப்கிரேட் செய்துக்கொண்டே இருக்கிறார். அவர் மேலும் பல வெற்றிகளை சுவைக்க வாழ்த்துக்கள்!.