இயக்குனர் பாலா இயக்கத்தில் தயாராகியுள்ள உள்ள வணங்கான் திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
பாலாவின் வணங்கான்:
சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாலா பிதாமகன் , நந்தா , நான் கடவுள் , பரதேசி , அவன் இவன் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி பாதையை உருவாக்கிய இயக்குநர்களுள் இவரும் ஒருவர். பாலா திரையுலகத்திற்குள் அடி எடுத்து வைத்து 25 ஆண்டுகள் கடந்துள்ளது. தற்போது அருண் விஜய் நடிப்பில் பாலா இயக்கியுள்ள படம் வணங்கான். ரோஷினி நாயகியாகவும் , மிஸ்கின் , சமுத்திரகனி உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி பெறப்பட்டு இன்று காலை சிறப்பு காட்சிகள் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
சிறப்பு காட்சிகள்:
இயக்குநர் பாலா இயக்கி அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் திரைப்படத்தின் காலை சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திரையரங்குகளுக்கு இன்னும் கேடிஎம் செல்லாத நிலையில் முதல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
Hearing #Vanangaan Morning Shows Cancelled Due To KDM Issue 😤#ArunVijay #Bala pic.twitter.com/vsTA3VbE1h
— Black Town (@townblack71) January 10, 2025
முதல் காலை 9 மணி காட்சிகள் ரத்து செய்யபடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 10 மணி காட்சி திட்டமிட்டப்படி திரையிடப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் 10 மணி காட்சியும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் திரைப்படத்தை காண ஆவலாய் இருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து திரை அரங்களுக்கு வழங்கவேண்டிய கேடிஎம் இன்னும் சென்றடையாதது தான் காரணம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதற்கான முழுக்காரணம் இதுவரை என்னவென்று தெரியவில்லை.
வெளியானது வணங்கான்:
இந்த நிலையில் தற்போது இந்த கேடிஎம் பிரச்சனை தீர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வணங்கான் திரைப்படத்தின் முதல் காட்சி வெளியான நிலையில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்