வயதானவராக நடிப்பார்! அப்பாவாகவும் நடிப்பார்! ஆகச்சிறந்த நடிகர் - விஜய் சேதுபதியை புகழ்ந்த பாலா

மிக மிக சிறந்த, ஆகச் சிறந்த நடிகன் விஜய் சேதுபதி. அவர் போன்ற நடிகர் நம் தமிழ் திரையுலகிற்கு கிடைத்ததற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும் என்று இயக்குநர் பாலா புகழ்ந்து பேசிய ஃப்ளாஷ் பேக் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Continues below advertisement

மிக மிக சிறந்த, ஆகச் சிறந்த நடிகன் விஜய் சேதுபதி. அவர் போன்ற நடிகர் நம் தமிழ் திரையுலகிற்கு கிடைத்ததற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும் என்று இயக்குநர் பாலா புகழ்ந்து பேசிய ஃப்ளாஷ் பேக் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Continues below advertisement

விஜய் சேதுபதி மிகச்சிறந்த நடிகர்:

விஜய் சேதுபதியின் எல்லா படங்களும் பார்த்திருக்கிறேன். எனக்கு சேதுபதி படம் பிடிக்கும். அதுபோலவே நானும் ரவுடி தான் படமும் ரொம்பப் பிடிக்கும். அதில் மி மி என்று அம்மாவை அழைப்பது குழந்தையின் வார்த்தை போல் இருக்கும். ஒரு சிலருக்கு என்னால் இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாக நடிக்க முடியுமா? காலேஜ் ஸ்டூடன்ட்டாக நடிக்க முடியுமா? வயதானவராக நடிக்க முடியுமா என்றெல்லாம் தயக்கம் இருக்கும். அப்படி எந்த தயக்கமும் இல்லாத மிக மிக சிறந்த, ஆகச் சிறந்த நடிகன் விஜய் சேதுபதி. அவர் போன்ற நடிகர் நம் தமிழ் திரையுலகிற்கு கிடைத்ததற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். 

அவன முட்டாள்னுதான் நினைசேன்..

சீனு ராமசாமி பாலுமகேந்திரா சாரிடம் ஜூனியராக இருந்தான். அப்போது பாலு சாரின் மனைவி சீனு ஒரு படம் எடுத்திருக்கிறான் அதை பாரு என்றார். அவன் என்னமா எடுத்திருக்கப் போறான் விடுங்க மா என்றேன். இல்லைடா போய் பாரு என்று அம்மா சொன்னாங்க. சரின்னு பார்த்தேன். பார்த்துட்டு நான் தூங்கவே இல்லை. அதுவரை அவன நான் ஒரு முட்டாள்னு தான் நினைச்சிருந்தேன். ஆனா என்னை அசத்திட்டான். இவனுக்கு பேசுறேன், சரண்யா மேடத்துக்கு பேசுறேன், எல்லார் கிட்டையும் பேசுறேன். விஜய் சேதுபதி எனக்கு அப்போ பழக்கமில்லை. அவரத் தவிர எல்லோர்கிட்டயும் பேசுறேன்.


அப்புறம் ஒருநாள் சீனு எனக்கு ஃபோன் பண்றான். அண்ணே நான் ஒரு சினிமா பண்றேன் அண்ணேன்னு சொன்னான். சரிடா பேசுவோம். இப்ப மணி என்ன டா என்றேன். 1 மணி என்றான். டேய் இப்போ ராத்திரி ஒரு மணி டான்னு சொன்னேன். ராத்திரி 1 மணிக்கு என்ன தோணுதோ அதை என்னிடம் அவனுக்கு சொல்லி ஆக வேண்டும். அப்படி ஒரு சினிமா வெறியன். இமோஷனல் ஏரியாவ இசையோட எப்படி கையாள்வது என்பது சீனு ராமசாமியிடம் தான் நான் கற்றுக் கொள்ள வேண்டும். சீனு பெண்களை ரொம்பவே கண்ணியமாக காட்டுவான். 

அதேபோல், யுவன் சங்கர் ராஜா பற்றி நிறைய விமர்சனங்கள் சொல்றாங்க. ராஜா சார் தாக்கம் இருக்குன்னு சொல்றாங்க. அவருக்கு மட்டும்தான் அது இருக்கா? ராஜா சார் இன்ஃப்ளூவன்ஸ் எல்லோருக்கும் தான் இருக்கு.
இவ்வாறு அந்த ஃப்ளாஷ் பேக் பேட்டியில் இயக்குநர் பாலா பேசியிருக்கிறார்.

சூர்யா 41:


அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளையும் வாழ்வியலையும் அப்படியே படமாக்குபவர் இயக்குநர் பாலா.  எதற்கும் துணிந்தவன் வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யா , இயக்குநர் பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார். பிதாமகன் திரைப்படத்திற்கு பிறகு இருவரும் இணைவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பினை சொல்லவே தேவையில்லை. சூர்யாவின் 41 வது படமாக உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்க , ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தை 2டி எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரித்து வருகின்றனர். இயக்குநர் பாலாவின் பிறந்தநாளில் நடிகர் சூர்யாவின் 41 வது திரைப்படத்தின் பெயர் ’வணங்கான்’ என வெளியிடப்பட்டுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola