நாள்: 19.07.2022


நல்ல நேரம் :


காலை 07.45 மணி முதல்  08.45 மணி வரை


மாலை 04.45 மணி முதல் 05.45 மணி வரை


கௌரி நல்ல நேரம் :


காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை


மாலை 07.30 மணி முதல் 08.30 மணி வரை


இராகு :


மதியம் 03.00 மணி முதல் 04.30 மணி வரை


குளிகை :


காலை 12.00 மணி முதல் மதியம் 01.30 மணி வரை


எமகண்டம் :


காலை 9.00 மணி முதல் மதியம் 10.30 மணி வரை


சூலம் – வடக்கு


மேஷம் :


மேஷ ராசி நேயர்களே,


மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நிலுவையில் இருந்துவந்த உத்தியோகம் தொடர்பான பணிகளை செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் மேம்படும். இளைய உடன்பிறப்புகளின் எண்ணங்களை அறிந்து கொள்வீர்கள். முயற்சிகள் மேம்படும் நாள்.


ரிஷபம்:


ரிஷப ராசி நேயர்களே, 


உயர் அதிகாரிகளின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் அமையும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மாற்றம் ஏற்படும். வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்கள் செல்வது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தொழில் நிமிர்த்தமான புதிய முடிவில் சிந்தித்து செயல்படவும். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.


மிதுனம் :


மிதுன ராசி நேயர்களே,


வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். ஆன்மிகம் தொடர்பான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குழந்தைகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பொறுமை வேண்டிய நாள்.


கடகம் :


கடக ராசி நேயர்களே,


கூட்டாளிகளின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதிலிருக்கும் பலவிதமான குழப்பத்திற்கு தெளிவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பொருட்களின் மூலம் ஆதாயம் மேம்படும். வாடிக்கையாளர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும். தெளிவு கிடைக்கும் நாள்.


சிம்மம்:


சிம்ம ராசி நேயர்களே,


எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் அலைச்சலுக்கு பின் நிறைவேறும். எதிர்பாராத பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் குழப்பமும், தனம் தொடர்பான நெருக்கடியும் ஏற்படும். நெருக்கமானவர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களையும், சந்தேக உணர்வுகளையும் தவிர்த்து பொறுமையுடன் செயல்படவும். அமைதி வேண்டிய நாள்.


கன்னி :


கன்னி ராசி நேயர்களே,


வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த காலதாமதம் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் எண்ணிய சுபகாரியம் கைகூடும். வெற்றி கிடைக்கும் நாள்.


துலாம் :


துலாம் ராசி நேயர்களே,


கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நண்பர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பொன், பொருள் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த காலதாமதம் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர் பதவி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும் நாள்.


விருச்சிகம் :


விருச்சிக ராசி நேயர்களே,


வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். மனதில் ஏற்பட்ட சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலைகள் ஏற்படும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.


தனுசு :


தனுசு ராசி நேயர்களே,


பேச்சில் தெளிவும், மனதில் தன்னம்பிக்கையும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். சகோதர, சகோதரிகளின் வழியில் நன்மை உண்டாகும். நண்பர்களுடன் இன்ப சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். கவலைகள் குறையும் நாள்.


மகரம் :


மகர ராசி நேயர்களே,


கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். பிடிவாத சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது. புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். இழுபறியாக இருந்துவந்த பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த சில பணிகள் திருப்திகரமாக இருந்தாலும் அலைச்சல்கள் உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.


கும்பம்:


கும்ப ராசி நேயர்களே,


வர்த்தகம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படுவதன் மூலம் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். தொழில் ரீதியான முயற்சிகளுக்கு உதவி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய நபர்களிடம் தேவையற்ற வீண் விவாதங்களை தவிர்க்கவும். அமைதி வேண்டிய நாள்.


மீனம்:


மீன ராசி நேயர்களே,


உடன்பிறந்தவர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். கடந்த கால நினைவுகளின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். வியாபார அபிவிருத்தி தொடர்பான முயற்சிகள் சாதகமாக அமையும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண