வணங்கான்
இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம் வணங்கான். பாலாவின் தயரிப்பு நிறுவனமான பி ஸ்டுடியோஸ் மற்றும் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மிஷ்கின், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். வரும் ஜனவரி 10 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
மமிதா பைஜூவை அடித்தாரா பாலா ?
வணங்கான் படத்தில் முன்னதாக சூர்யா நடிக்கவிருந்தார். படப்பிடிப்பின்போது பாலா நடிகர்களை அவமதித்த காரணத்தினால் சூர்யா மற்றும் பாலா இடையில் கருத்து வேறுபாடு எற்ப்பட்டது இதனால் சூர்யா இப்படத்தில் இருந்து விலகியதாக தகவல்கள் தெரிவித்தன. இது குறித்து பாலா சமீபத்திய பேட்டியில் விளக்கமளித்தார். " சூர்யாவை வைத்து லை லொக்கேஷனில் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. இதனால் நாங்கள் இருவரும் சேர்ந்து வேறு படம் பண்ணிக்கலாம் என்று தான் இந்த முடிவை எடுத்தோம். அவர் இந்த படத்தில் இருந்து விலகவில்லை " என்று விளக்கம் கொடுத்தார்.
அதேபோல் வணங்கான் படத்தில் முன்னதாக மலையாள நடிகை மமிதா பைஜூ நடிக்க இருந்தார். படப்பிடிப்பின் போது பாலா அவரை அடித்ததால் அவர் படத்தில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. மமிதா பைஜூ இந்த தகவல் தன் சார்பில் இருந்து மறுத்தார். இதுகுறித்து பாலா தற்போது பேசியுள்ளார் ' மமிதா பைஜூ என் மகள் மாதிரி . பெண் பிள்ளை மேல் கை நீட்டுவார்களா. மும்பையில் இருந்து வந்த மேக் அப் ஆர்டிஸ்ட் அந்த நடிகைக்கு மேக் அப் போட்டுவிட்டார். எனக்கு மேக் அப் போட்டால் பிடிக்காது என்று அவருக்கு தெரியாது. ஷாட் ரெடி என்று வர சொன்னால் மமிதா மேக் அப் போட்டு வந்து நிற்கிறார். யார் மேக் அப் போட்டது என்று கையை ஓங்கினேன். உடனே நான் அவரை அடித்தேன் என்று செய்தியாக்கிவிட்டார்கள்" என பாலா தெரிவித்துள்ளார்.
மமிதா பைஜூ தற்போது எச் வினோத் இயக்கும் தளபதி 69 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.